» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு 50 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
புதன் 13, மே 2026 4:16:28 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 50 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போக்சோ சட்டத்தின் கீழ் குற்றச் செயல்களில் ஈடுபட்ட நாங்குநேரி வட்டம், கோவைகுளம் பகுதியைச் சேர்ந்த இசக்கிபாண்டி (26) மற்றும் முப்பிடாதி (30) ஆகிய இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தனர். இவர்களின் குற்றப் பின்னணியைக் கருத்தில் கொண்டு, அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க இன்ஸ்பெக்டர் சுதா பரிந்துரை செய்தார்.
அதேபோல், பாப்பாக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி, அடிதடி மற்றும் மிரட்டல் வழக்குகளில் தொடர்புடைய சேரன்மகாதேவி வட்டம், நந்தன்தட்டை பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (50) என்பவரும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க இன்ஸ்பெக்டர் பரத்லிங்கம் பரிந்துரை செய்தார்.
காவல் ஆய்வாளர்களின் பரிந்துரையை ஏற்று, மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் மாவட்ட ஆட்சியர் சுகுமாரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதனைப் பரிசீலித்த மாவட்ட ஆட்சியர், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட இந்த 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, இதற்கான ஆணை நேற்று சிறையில் வழங்கப்பட்டு, 3 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 50 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரவு நேரங்களில் மின்தடை ஏற்படுவது ஏன்? - மின்வாரியத்துறை தலைவர் விளக்கம்
ஞாயிறு 7, ஜூன் 2026 11:49:49 AM (IST)

டாஸ்மாக் நிர்வாகத்தில் அதிரடி மாற்றம்: ஆண்டுக்கு ரூ.1,200 கோடி கூடுதல் வருவாய் - தமிழ்நாடு அரசு உத்தரவு!
ஞாயிறு 7, ஜூன் 2026 11:47:51 AM (IST)

தூத்துக்குடியில் பலத்த காற்றால் மீன் வரத்து குறைவு; பொதுமக்கள் ஆர்வம் – மீனவர்கள் மகிழ்ச்சி!
ஞாயிறு 7, ஜூன் 2026 9:08:16 AM (IST)

குடும்பத்தினர் கண் எதிரே கடத்தப்பட்ட கார் விற்பனை ஏஜென்ட் மீட்பு: 2 பேர் கைது!
ஞாயிறு 7, ஜூன் 2026 8:58:15 AM (IST)

நெல்லையில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோவில் கைது!
ஞாயிறு 7, ஜூன் 2026 8:51:11 AM (IST)

ரயிலில் வந்த இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை : கொத்தனாருக்கு தர்ம அடி கொடுத்துப் போலீசில் ஒப்படைப்பு!
ஞாயிறு 7, ஜூன் 2026 8:37:41 AM (IST)


