» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
உளவுத்துறை ஐ.ஜி-யாக அஸ்ரா கர்க் நியமனம் : தமிழக அரசு உத்தரவு!
புதன் 13, மே 2026 3:44:08 PM (IST)
தமிழக காவல்துறையில் மிக முக்கியமான பதவியாகக் கருதப்படும் உளவுத்துறை ஐ.ஜி பதவியில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி, தற்போது வடக்கு மண்டல ஐ.ஜி-யாகப் பணியாற்றி வரும் அஸ்ரா கர்க், ஐ.பி.எஸ் உளவுத்துறை ஐ.ஜி-யாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.தற்போது உளவுத்துறை ஐ.ஜி-யாகப் பணியாற்றி வரும் அவினாஷ் குமாருக்குப் பதிலாக அஸ்ரா கர்க் இந்த முக்கியப் பொறுப்பை ஏற்கிறார். தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு விவகாரங்களைக் கையாளுவதில் உளவுத்துறை ஐ.ஜி பதவி மிக முக்கியமானது என்பதால், இந்த நியமனம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் கே. மணிவாசன் வெளியிட்டுள்ள இந்த உத்தரவு, உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேர்மையான மற்றும் அதிரடியான அதிகாரி என்று பெயரெடுத்த அஸ்ரா கர்க், ஏற்கனவே தென் மண்டல ஐ.ஜி-யாகப் பணியாற்றியபோது பல்வேறு முக்கிய வழக்குகளைக் கையாண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரவு நேரங்களில் மின்தடை ஏற்படுவது ஏன்? - மின்வாரியத்துறை தலைவர் விளக்கம்
ஞாயிறு 7, ஜூன் 2026 11:49:49 AM (IST)

டாஸ்மாக் நிர்வாகத்தில் அதிரடி மாற்றம்: ஆண்டுக்கு ரூ.1,200 கோடி கூடுதல் வருவாய் - தமிழ்நாடு அரசு உத்தரவு!
ஞாயிறு 7, ஜூன் 2026 11:47:51 AM (IST)

தூத்துக்குடியில் பலத்த காற்றால் மீன் வரத்து குறைவு; பொதுமக்கள் ஆர்வம் – மீனவர்கள் மகிழ்ச்சி!
ஞாயிறு 7, ஜூன் 2026 9:08:16 AM (IST)

குடும்பத்தினர் கண் எதிரே கடத்தப்பட்ட கார் விற்பனை ஏஜென்ட் மீட்பு: 2 பேர் கைது!
ஞாயிறு 7, ஜூன் 2026 8:58:15 AM (IST)

நெல்லையில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோவில் கைது!
ஞாயிறு 7, ஜூன் 2026 8:51:11 AM (IST)

ரயிலில் வந்த இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை : கொத்தனாருக்கு தர்ம அடி கொடுத்துப் போலீசில் ஒப்படைப்பு!
ஞாயிறு 7, ஜூன் 2026 8:37:41 AM (IST)


