» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆளுநரின் நிபந்தனைக்கு கடும் எதிர்ப்பு: விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய திருமாவளவன்!
வியாழன் 7, மே 2026 11:29:18 AM (IST)
"எங்களுடன் இணைந்து தவெக ஆட்சி அமைக்க விரும்புவதை நாங்கள் பரிசீலித்து வருகிறோம்" என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் நிலவி வரும் அரசியல் இழுபறிக்கு இடையே, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயைப் பதவியேற்க அழைக்காத ஆளுநரின் முடிவிற்கு தொல். திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய்க்குப் பெரும்பான்மை இருக்கிறதா என்பதைச் சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டுமே தவிர, 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைக் காண்பித்த பிறகுதான் வாருங்கள் என ஆளுநர் சொல்ல முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனிப்பெரும் கட்சியாகத் தவெக-வை மக்கள் தேர்ந்தெடுத்துள்ள நிலையில், ஆளுநர் இன்னும் முடிவெடுக்காமல் காலத்தாமதம் செய்வது அரசியல் குழப்பத்திற்கு வழிவகுக்கும். இது ஏற்புடையதல்ல என்று அவர் விமர்சித்துள்ளார்.
விஜயைப் பதவியேற்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்திய திருமாவளவன், "எங்களுடன் இணைந்து தவெக ஆட்சி அமைக்க விரும்புவதை நாங்கள் பரிசீலித்து வருகிறோம்" என்றும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஆளுநரைச் சந்தித்த விஜய், இன்றும் இரண்டாவது முறையாகச் சந்தித்துத் தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். திருமாவளவனின் இந்த ஆதரவு அறிக்கை, தமிழக அரசியல் களத்தில் தவெக-விற்குச் சாதகமான ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தெற்கு ரயில்வேயின் புதிய தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியாக எஸ்.என். நரேன் நியமனம்!
புதன் 13, மே 2026 8:10:40 PM (IST)

கள்ளத்தொடர்பு விவகாரத்தில் இளம்பெண் கொலை: தம்பதி கைது - தூத்துக்குடியில் பயங்கரம்!
புதன் 13, மே 2026 5:21:10 PM (IST)

எடப்பாடி பழனிசாமி பதவி ஆசை: திமுகவுடன் கூட்டணி முயற்சி - சி.வி. சண்முகம் பரபரப்பு புகார்!
புதன் 13, மே 2026 4:57:47 PM (IST)

அமைச்சரவையில் நாடார் சமூக எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும்: சமக தீர்மானம்!
புதன் 13, மே 2026 4:53:34 PM (IST)

குதிரை பேரப் புகார்: தவெக தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடுவதாக மு.க. ஸ்டாலின் விமர்சனம்!
புதன் 13, மே 2026 4:21:55 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு 50 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
புதன் 13, மே 2026 4:16:28 PM (IST)


