» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜோஸ் சார்லஸ் பிரமாண்ட வெற்றி!

திங்கள் 4, மே 2026 5:35:36 PM (IST)

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் ஜோஸ் சார்லஸ் மார்டின் வெற்றியை பதிவு செய்துள்ளார். என்.டி.ஏ கூட்டணியில் லட்சிய ஜனநாயகக் கட்சி (LJK) சார்பில் போட்டியிட்ட அவர் 16,592 வாக்குகள் பெற்று, 10,205 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தேவதாஸை வீழ்த்தியுள்ளார்.

புதுவை சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. யூனியன் பிரதேசமான புதுவையில் இந்த முறை ஆட்சியை பிடிக்க போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது. ஆனால் கருத்துக்கணிப்பு முடிவுகளின் படியே என்.டி.ஏ கூட்டணி 18 இடங்களில் வெற்றி பெற்று ரங்கசாமியே மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளார். அதேவேளையில் லாட்டரி மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் லட்சிய ஜனநாயக கட்சி இந்த தேர்தலில் முதல் முறையாக களம் இறங்கியது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் லட்சிய ஜனநயக கட்சி இரண்டு இடங்களில் போட்டியிட்டது. கமாராஜ் நகரில் அக்கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் போட்டியிட்டார். இந்த தொகுதியில் அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் தேவதாஸ், தவெக சார்பில் சுமன், நாம் தமிழர் கட்சி சார்பில் கவுரி, கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லெனின் துரை ஆகியோர் போட்டியிட்டனர். காமராஜ் நகரில் 87.22 சதவீத வாக்குகள் பதிவானது.

இந்த நிலையில் ஆரம்பம் முதலே ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் முன்னிலை பெற்று வந்தார். தொடர்ந்து முன்னிலை பெற்று வந்த அவர், இறுதியில் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதாவது 16,592 வாக்குகள் பெற்று, 10,205 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory