» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முதலமைச்சர் விஜய் மக்களுக்காகவே உழைப்பார் : நடிகர் ஸ்ரீமன் உற்சாக பதிவு!

திங்கள் 4, மே 2026 12:28:53 PM (IST)

தமிழக சட்டசபை தேர்தலில் தவெக முன்னிலை வகித்து வரும் நிலையில், விஜய்யின் நண்பரும், நடிகருமான ஸ்ரீமன் 'மக்களின் தீர்ப்பே மகேசனின் தீர்ப்பு' என உற்சாகமாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆரம்ப கட்டத்திலிருந்தே முன்னிலை வகித்து வருகிறது. வாக்கு எண்ணிக்கை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில், தவெக முன்னிலையில் இருப்பது அவரது ரசிகர்கள் மற்றும் அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. தற்போது வரை விஜய்-யின் தவெக 100-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளது.

இதனிடையே விஜய்யின் நண்பரும், நடிகருமான ஸ்ரீமான் தனது எக்ஸ் பக்கத்தில் 'மக்களின் தீர்ப்பே மகேசனின் தீர்ப்பு' என உற்சாகமாக பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், 1998-ஆம் ஆண்டில், எனது நண்பரான முதலமைச்சரிடம் இதை எடுத்துரைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மக்களே, உங்களுக்கு என் நன்றி! 'மக்களின் தீர்ப்பே மகேசனின் தீர்ப்பு' ஆகும். நமது முதலமைச்சர் உங்களுக்காகவே உழைப்பார். அவர் உள்ளத்தால் மிகவும் நேர்மையானவர். ஒருமுறை அவர் வாக்குறுதி அளித்துவிட்டால், தன் சொல்லைக் காப்பாற்ற அவர் தன்னால் இயன்றவரை முழு முயற்சி மேற்கொள்வார்; அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற அவர் முழு மனதுடன் உழைப்பார். என்று பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory