» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
புதுச்சேரியில் முதல்வர் என். ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி!
திங்கள் 4, மே 2026 4:41:37 PM (IST)
புதுவை யூனியன் பிரதேசத்தில் மீண்டும் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சி அமைக்கவுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசமானது புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களை உள்ளடக்கியது. இங்கு மொத்தம் 30 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.இங்கு கடந்த 1964-ஆம் ஆண்டு முதலாவது சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. தற்போது 15-ஆவது சட்டப்பேரவைக்கான தோ்தல் கடந்த 9-ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. புதுச்சேரியில் முதல்வர் என். ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் உள்ளது.
இந்தத் தேர்தலில் இந்தக் கூட்டணியில் புதிதாக லட்சிய ஜனநாயகக் கட்சி இணைந்தது. இந்தக் கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் பாஜக 10 தொகுதிகளிலும், அதிமுக 2 தொகுதிகளிலும், லட்சிய ஜனநாயகக் கட்சி 2 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், திமுக 13 தொகுதிகளிலும், விசிக ஒரு தொகுதியிலும் களத்தில் உள்ளன. போட்டியிட தொகுதி ஒதுக்கப்படாத நிலையில் திமுகவை எதிர்த்து 5 தொகுதிகளிலும், விசிகவை எதிர்த்து ஒரு தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 பேர் போட்டியிட்டனர்.
இதைத் தவிர, இந்திய கம்யூனிஸ்ட் ஒரு தொகுதியிலும், மார்க்சிஸ்ட் இரண்டு தொகுதியிலும் தனியாகப் போட்டியிட்டனர். மேலும், இத்தேர்தலில் புதிய வரவாக நடிகர் விஜய்யின் தவெக கட்சி போட்டியிட்டு, 28 தொகுதிகளிலும், 2 தொகுதிகளில் புதுச்சேரியைச் சேர்ந்த மக்கள் நேயம் கட்சியுடன் கூட்டணி அமைத்தும் தவெக களத்தில் போட்டியிட்டது.
இந்தத் தேர்தலில் போட்டி கடுமையாக இருந்த நிலையில், பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் முன்னிலையில் இருப்பதால், மீண்டும் என். ஆர். காங்கிரஸ் கூட்டணியே ஆட்சியமைக்கும் வாய்ப்புள்ளது.
பிற்பகல் 4 மணி நிலவரப்படி, என்.ஆர். காங்கிரஸ் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளது. பாஜக 2 தொகுதிகளில் வெற்றியும் 3 தொகுதிகளில் முன்னிலையிலும் உள்ளன. திமுக, காங்கிரஸ் கட்சிகள் தலா 1 தொகுதிகளிலும், சுயேச்சை வேட்பாளர்கள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜோஸ் சார்லஸ் பிரமாண்ட வெற்றி!
திங்கள் 4, மே 2026 5:35:36 PM (IST)

துறைமுகம் தொகுதியில் சேகர்பாபு வெற்றி!
திங்கள் 4, மே 2026 4:45:26 PM (IST)

கோவை தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வெற்றி
திங்கள் 4, மே 2026 4:24:56 PM (IST)

கொளத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தோல்வி ; முன்னணி அமைச்சர்கள் கடும் பின்னடைவு!
திங்கள் 4, மே 2026 4:14:35 PM (IST)

ஒரு கோடிக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று முதலிடம்: வரலாறு படைக்கும் த.வெ.க.!
திங்கள் 4, மே 2026 3:40:30 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் 4 தொகுதிகளில் தவெக ஆதிக்கம்: அம்பையில் அதிமுக முன்னிலை!
திங்கள் 4, மே 2026 12:41:03 PM (IST)


