» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வாக்கு எண்ணும் மையம் சிசிடிவி கண்காணிப்பு அறையில் ஜனநாயகன் பார்த்த ஊழியர் கைது!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 12:35:26 PM (IST)
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையக் கட்டுப்பாட்டு அறையில், லேப்டாப்பில் ஜனநாயகன் படம் பார்த்த ஒப்பந்த ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்கு இயந்திரங்கள் 62 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் ராணி மேரிக் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி ஆகிய மூன்று இடங்களில் 16 தொகுதிகளுக்கான வாக்கு இயந்திரங்கள் மூன்றடுக்கு பாதுகாப்பில் உள்ளன.
இந்த மையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை (CCTV) 24 மணி நேரமும் கண்காணிக்கச் சுழற்சி முறையில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்புப் பணியில் இருந்த யுவராஜ் என்ற ஒப்பந்த ஊழியர், தனது லேப்டாப்பில் நடிகர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைச் சட்டவிரோதமாகப் பதிவிறக்கம் செய்து பார்த்துள்ளார்.
அத்துடன் நிறுத்தாமல் படம் பார்ப்பதைச் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்ட தனது தற்காலிக அடையாள அட்டையைப் புகைப்படம் எடுத்துள்ளார். இந்த வீடியோ மற்றும் புகைப்படத்தைத் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சமூக வலைதளத்தில் இது வைரலானதைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. மிக முக்கியமான பாதுகாப்பு மண்டலத்தில் (Strong Room) அமர்ந்து கொண்டு, விதிகளை மீறிச் சினிமா பார்த்ததுடன், அதனை இணையதளத்தில் கசியவிட்ட செயல் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உயர் அதிகாரிகளின் புகாரின் பேரில், தேர்தல் பாதுகாப்பு விதிகளை மீறியது மற்றும் கவனக்குறைவாகச் செயல்பட்டது ஆகிய பிரிவுகளின் கீழ் யுவராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண்களைத் தொழில்முனைவோராக்கும் திட்டம் : தூத்துக்குடியில் 5 நாள் சிறப்புப் பயிற்சி முகாம்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 12:48:35 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் மே 1-ஆம் தேதி மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 11:00:07 AM (IST)

மதுரையில் மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 10:49:08 AM (IST)

சிறுமியைப் பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 8:57:05 AM (IST)

விளைச்சல் குறைவால் சின்ன வெங்காயம், தக்காளி விலை கிடுகிடு உயர்வு: இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 8:48:40 AM (IST)

தி.மு.க. வேட்பாளர் வீட்டில் 122 பவுன் நகைகள் கொள்ளை: தம்பதி மற்றும் இளம்பெண் கைது!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 8:25:59 AM (IST)


