» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தி.மு.க. வேட்பாளர் வீட்டில் 122 பவுன் நகைகள் கொள்ளை: தம்பதி மற்றும் இளம்பெண் கைது!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 8:25:59 AM (IST)
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கடற்கரைராஜ் வீட்டில் 122 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், தம்பதி உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சாத்தூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட்டவர் கடற்கரைராஜ். இவர் சாத்தூர் அருகே வெங்கடாசலபுரம் பகுதியில் வசித்து வருகிறார். இவரது குடும்பத்தினர் தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக இருந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.
அங்கிருந்த 122 பவுன் நகைகள், 800 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.45 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைத் திருடிச் சென்றனர். விருதுநகர் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட 3 தனிப்படைகள், சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணையைத் தீவிரப்படுத்தின. இவ்வழக்கில் ஏற்கனவே ஆரோக்கிய ஜான்போஸ்கோ (41) என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அவரிடமிருந்து 12 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், சாத்தூர் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (31), அவரது மனைவி பவானி (30) மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த அபிநயா (30) ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சுரேஷ்குமார் மீது ஏற்கனவே 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர் முன்பு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வேட்பாளரின் குடும்பத்தினர் பிரசாரத்தில் இருந்ததை நோட்டமிட்டு இவர்கள் இந்தக் கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த துணிகரக் கொள்ளையில் மேலும் சிலருக்குத் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கும் போலீசார், அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மே 1-ஆம் தேதி மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 11:00:07 AM (IST)

மதுரையில் மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 10:49:08 AM (IST)

சிறுமியைப் பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 8:57:05 AM (IST)

விளைச்சல் குறைவால் சின்ன வெங்காயம், தக்காளி விலை கிடுகிடு உயர்வு: இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 8:48:40 AM (IST)

திருச்செந்தூரில் தவெக தலைவர் விஜய் தரிசனம் : ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 8:14:27 AM (IST)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிகர லாபம் ரூ.1,337 கோடியாக உயர்வு : நிர்வாக இயக்குனர் தகவல்
திங்கள் 27, ஏப்ரல் 2026 10:02:11 PM (IST)


