» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திமுக ஒருபோதும் இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 10:21:00 AM (IST)
திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். திமுக ஒருபோதும் இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல என்று முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியது: "2021 சட்டமன்ற தேர்தலின்போது கருணாநிதியை விட மிக டேஞ்சரானவர் ஸ்டாலின் என சிலர் சொன்னார்கள். கருணாநிதி உடன் என்னை எப்போதும் ஒப்பிட முடியாது. அப்படிப்பட்ட சூழலில் தமிழ்நாட்டை வஞ்சிக்கவும், நம் வளர்ச்சியை தடுக்க நினைப்பவர்களுக்கு நான் எப்போதும் டேஞ்சர்தான்.தமிழ்நாட்டை எப்போதும் வஞ்சிக்கும் ஒன்றிய அரசை எதிர்த்து தமிழ் மக்களுக்காக சண்டை செய்துள்ளதை பெருமையாக சொல்லிக் கொள்ள முடியும். சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சி என்பதுதான் நமது உண்மையான குறிக்கோள். அந்த வகையில் பல்வேறு மக்கள் திட்டங்களை இந்த ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தி உள்ளோம்.
கல்வி ஒன்றுதான் நம்மிடமிருந்து யாரும் திருட முடியாத சொத்து. அந்த வகையில் மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். இந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியின் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி கண்டுள்ளது.
ஒன்றிய அரசு தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை சார்ந்த மசோதாவை கடந்த வாரம் மக்களவையில் கொண்டு வந்தது. அந்த மசோதாவை எதிர்த்தும், எரித்தும் போராட்டம் செய்தோம். அவர்களின் அடிமையான எடப்பாடி பழனிசாமி இங்கு ஆட்சிக்கு வந்து விட்டால் என்ன மாதிரியான கொடுமையெல்லாம் நடக்கும் என நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.
திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அப்படி பொய் சொல்லி பாஜக பிரச்சாரம் செய்து வருகிறது. திமுக ஒருபோதும் இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக எவ்வளவோ கொடுமை செய்து வருகிறார்கள். ஆனால், சிறுபான்மையினர் மக்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் திமுக களத்தில் இருக்கும். 1975-ல் மிசா போரை அன்றைய ஒன்றிய அரசு நடத்திய போது அதை எதிர்த்து நடத்தினேன். இப்போதும் நமக்கு எதிரான போரை எதிர்த்து நிற்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சட்டமன்ற பொதுத்தேர்தல் மினி மாரத்தான் போட்டி: ஆட்சியர் இரா.சுகுமார், தொடங்கி வைத்தார்
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:55:14 PM (IST)

நடிகர் பார்த்திபனுக்கு சாதி, மதமற்றவர் சான்றிதழ் : வட்டாட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:52:09 PM (IST)

யூடியூபர் முக்தார் விவகாரம் : அதிமுக கூட்டணிக்கு ஆதரவு - நாடார் சங்கம் அறிவிப்பு!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 10:52:35 AM (IST)

வெற்றி வாகை சூடுவோம்; வரலாறு படைப்போம் : வாக்காளர்களுக்கு விஜய் வேண்டுகோள்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 10:45:56 AM (IST)

மேட்டூர் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 10:17:09 AM (IST)

வாக்காளர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்பட வேண்டும் : அதிமுக வேட்பாளரின் பேச்சால் சர்ச்சை!
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:51:43 PM (IST)

