» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திமுகவை எதிர்த்தால்தான் வளர முடியும் என்பது தவறு: விஜய் குறித்து முதல்வர் விளக்கம்!
திங்கள் 20, ஏப்ரல் 2026 11:29:33 AM (IST)
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முன்வைக்கும் விமர்சனங்களுக்குத் தான் ஏன் பதிலடி கொடுப்பதில்லை என்பது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த முதல்வர் ஸ்டாலின், அரசியல் சூழல் மற்றும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்துப் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.விமர்சனங்களை ஏன் தவிர்த்தார்? தேர்தல் களத்தில் திமுகவை விஜய் கடுமையாகச் சாடி வரும் நிலையில், அதற்கு ஏன் பதில் அளிக்கவில்லை என்ற கேள்விக்கு முதல்வர் கூறியதாவது:
"நான் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியைக் கூடக் கடுமையாகப் பேசுவதில்லை. அவர் எழுப்பும் கேள்விகளுக்கும், சொல்லும் பிரச்சினைகளுக்கும் தகுந்த பதிலைத் தான் சொல்லி வருகிறேன். அதேபோல்தான் விஜயைப் பற்றியும் நீங்கள் கேட்கிறீர்கள். திமுகவைப் பொறுத்தவரை, புதிதாக யாராவது அரசியலுக்கு வந்தாலோ அல்லது கட்சி தொடங்கினாலோ, திமுகவை விமர்சிப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது காலம் காலமாகத் தொடர்ந்து நடக்கும் ஒன்றுதான்."
திமுகவின் வளர்ச்சி மற்றும் அதன் மீதான விமர்சனங்கள் குறித்து அவர் மேலும் கூறுகையில்: "நான் வெளிநாடுகளுக்குச் செல்லும் போதெல்லாம், பலரும் தங்களுக்கு வேலை கிடைத்ததற்கும், முன்னேற்றத்திற்கும் முன்னாள் முதல்வர் கருணாநிதியும், திமுகவுமே உந்துசக்தியாக இருந்ததாகக் கூறுகின்றனர். திமுகவை எதிர்த்தால் தான் அல்லது விமர்சித்தால் தான் வளர முடியும் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், அது தவறான அணுகுமுறை."
"திமுக என்பது ஒரு ஆக்க சக்தி. தமிழகத்தில் இன்று பல்லாயிரக்கணக்கான தொழிற்சாலைகள் வந்துள்ளன என்றால், அதற்கு திமுகவின் ஆக்கப்பூர்வமான ஆட்சிதான் காரணம். எனவே, இதுபோன்ற விமர்சனங்களைப் பற்றி நாங்கள் கவலைப்படுவது இல்லை" என்று முதல்வர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம் உட்பட 12 மாற்று ஆவணங்கள் மூலம் வாக்களிக்கலாம்!
புதன் 22, ஏப்ரல் 2026 12:38:00 PM (IST)

திமுக கூட்டணிக்கு அளித்த ஆதரவு வாபஸ் : ஆயர் பேரவை அறிவிப்பு
புதன் 22, ஏப்ரல் 2026 11:32:36 AM (IST)

சிமெண்ட் கலவை டேங்கர் லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்து: குழந்தை உள்பட 20 பேர் காயம்!
புதன் 22, ஏப்ரல் 2026 10:33:36 AM (IST)

வீடுபுகுந்து பேராசிரியையை அரிவாளால் தாக்கி 14 பவுன் நகை கொள்ளை: நெல்லையில் துணிகரம்!
புதன் 22, ஏப்ரல் 2026 8:13:10 AM (IST)

அரசு கேபிள் கட்டணம் 50% குறைப்பு; 10 லட்சம் பேருக்கு பைக் மானியம்: இபிஎஸ் அறிவிப்பு
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 5:23:25 PM (IST)

வீடு வீடாக வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா : திமுக பெண் நிர்வாகியிடம் ரூ.1.38 லட்சம் பறிமுதல்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 4:53:18 PM (IST)

