» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் பஞ்சு குடோனில் பயங்கர தீவிபத்து : பல கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 9:18:27 AM (IST)

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த பஞ்சு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின.
தூத்துக்குடி சிப்காட் தொழில்பேட்டை வளாகப் பகுதியில் தனியார் ஏற்றுமதி நிறுவனத்திற்குச் சொந்தமான பஞ்சு கிடங்கு ஒன்று உள்ளது. இங்கு வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக ஏராளமான பஞ்சு மூட்டைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. நேற்று சனிக்கிழமை பிற்பகலில், கிடங்கின் ஒரு பகுதியில் திடீரென தீப் பிடித்து எரியத் தொடங்கியது. பஞ்சு என்பதால் தீ மளமளவென கிடங்கு முழுவதும் பரவி, கரும்புகை வானை முட்டியது.
இது குறித்துத் தகவல் அறிந்த மாவட்ட அலுவலர் கருணாகரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், மூன்று தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயின் வீரியம் அதிகமாக இருந்ததால், நீண்ட நேரம் போராடித் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, உள்ளே ஏற்பட்ட கடும் வெப்பம் காரணமாகக் கிடங்கின் ஒரு பக்கச் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விபத்தில் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த ரூ.25 கோடி மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் மற்றும் இதர தளவாடப் பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமாகின. தீ விபத்திற்கான காரணம் குறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சட்டமன்ற பொதுத்தேர்தல் மினி மாரத்தான் போட்டி: ஆட்சியர் இரா.சுகுமார், தொடங்கி வைத்தார்
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:55:14 PM (IST)

நடிகர் பார்த்திபனுக்கு சாதி, மதமற்றவர் சான்றிதழ் : வட்டாட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:52:09 PM (IST)

யூடியூபர் முக்தார் விவகாரம் : அதிமுக கூட்டணிக்கு ஆதரவு - நாடார் சங்கம் அறிவிப்பு!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 10:52:35 AM (IST)

வெற்றி வாகை சூடுவோம்; வரலாறு படைப்போம் : வாக்காளர்களுக்கு விஜய் வேண்டுகோள்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 10:45:56 AM (IST)

திமுக ஒருபோதும் இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 10:21:00 AM (IST)

மேட்டூர் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 10:17:09 AM (IST)

