» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அமைச்சர் சேகர் பாபு மகன்களின் நிறுவனத்தில் வருமான வரித்துறை திடீர் சோதனை
திங்கள் 13, ஏப்ரல் 2026 4:50:17 PM (IST)
சென்னை மயிலாப்பூரில் உள்ள அமைச்சர் சேகர்பாபுவின் மகன்களுக்குச் சொந்தமான நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் மகன்களுக்குச் சொந்தமான நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் இன்று (ஏப். 13) அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை மயிலாப்பூரில் உள்ள சாலை கட்டுமான டெண்டர் நிறுவனம் மற்றும் வடபழனி, கீழ்ப்பாக்கம், அடையாறு உள்ளிட்ட 5 இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சர் சேகர் பாபுவின் மகன்கள் ஜெயசிம்மன் மற்றும் விக்னேஷ் ஆகியோர் நடத்தி வரும் இந்த நிறுவனத்தில், தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பான புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மத்திய பாதுகாப்புப் படையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினரின் முன்னிலையில் இந்தச் சோதனை நடைபெறுகிறது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்கள் சோதனை நிறைவடைந்த பின்னரே தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வருமான வரித்துறை ரூ.1.50 கோடி அபராதம்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து விஜய் மேல்முறையீடு
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:52:43 PM (IST)

வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கும் பணி : ஆட்சியர் சுகுமார் ஆய்வு
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:33:47 PM (IST)

உங்கள் வீட்டில் திருடிவிட்டு ரூ.2000 கொடுத்தால் வாங்குவீர்களா? சீமான் கேள்வி
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:23:56 PM (IST)

தமிழர் வாழ்வில் அமைதி, வளம் பெருகட்டும்: சரத்குமார் புத்தாண்டு வாழ்த்து!
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:05:54 PM (IST)

திருநெல்வேலி தொகுதியில் தபால் வாக்குப்பதிவு : பொதுப் பார்வையாளர் ஆய்வு
திங்கள் 13, ஏப்ரல் 2026 3:54:44 PM (IST)

த.வெ.க., வேட்பாளருக்காக பிரச்சாரம்: நண்பரின் மகனுக்காக வாக்கு சேகரித்த நடிகர் ராமராஜன்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 3:49:54 PM (IST)

