» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

த.வெ.க., வேட்பாளருக்காக பிரச்சாரம்: நண்பரின் மகனுக்காக வாக்கு சேகரித்த நடிகர் ராமராஜன்!

திங்கள் 13, ஏப்ரல் 2026 3:49:54 PM (IST)



ஆலங்குளம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் விபின் சக்கரவர்த்திக்கு ஆதரவாக அதிமுகவைச் சேர்ந்த நடிகர் ராமராஜன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் விபின் சக்கரவர்த்திக்கு ஆதரவாக அதிமுகவைச் சேர்ந்த நடிகர் ராமராஜன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

உடையாம்புளி, ஓடைமறிச்சான், மருதம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்த ராமராஜன், "அரசியலுக்கு அப்பாற்பட்டு, குடும்ப நட்புக்காக மட்டுமே விபின் சக்கரவர்த்திக்கு ஆதரவு திரட்ட வந்துள்ளேன்" எனத் தெரிவித்தார். தனது 'சாமானியன்' திரைப்படத்தைத் திரையிட்டு வெற்றிபெறச் செய்த டிபிவி குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று, அந்த குடும்பத்தின் வாரிசான விபின் சக்கரவர்த்திக்காகப் பிரசாரம் செய்வதாக அவர் விளக்கமளித்தார்.

எம்ஜிஆர் மீதான மரியாதை தனது உயிர் இருக்கும் வரை மாறாது என்று குறிப்பிட்ட அவர், வேட்பாளர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதை விடத் தனக்கு விசுவாசமே முக்கியம் என்றார். அதிமுகவில் இருக்கும் நடிகர் ராமராஜன், மாற்றுக்கட்சியான தவெக வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தது ஆலங்குளம் தொகுதி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory