» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அண்ணாமலை தேர்தலில் போட்டியிடாததற்கு தோல்வி பயமே காரணம்: கனிமொழி கருத்து!

புதன் 8, ஏப்ரல் 2026 10:26:42 AM (IST)

வெற்றிபெற வாய்ப்பில்லை என்பதால் தான் அண்ணாமலை தேர்தலிலேயே நிற்கவில்லை என்று கனிமொழி எம்பி கருத்து தெரிவித்துள்ளார். 

சட்டசபைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இணைந்து போட்டியிடுகிறது. பாஜகவுக்கு 27 தொகுதிகள் அளிக்கப்பட்ட நிலையில், அதற்கான வேட்பாளர்கள் பட்டியல் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. அந்தப் பட்டியலில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பெயர் இடம்பெறவில்லை. இது பாஜகவினர் மத்தியில் பேசுபொருளாகியது.

கோவையில் பாஜகவுக்கு ஒரேயொரு தொகுதி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த தொகுதியில் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். இதனால் அண்ணாமலை போட்டியிடவில்லை என்று தெரிகிறது. அதேபோல் தமிழக பாஜக அனுப்பிய பரிந்துரை பட்டியலில் கூட அண்ணாமலை பெயர் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனை அண்ணாமலையும் உறுதி செய்தார்.

ஏற்கனவே 2021 சட்டசபைத் தேர்தல் மற்றும் 2024 லோக்சபா தேர்தலில் அண்ணாமலை போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதனால் இம்முறையும் தோல்வி அடைந்தால், அது தன்னுடைய இமேஜிற்கு சிக்கலாகும் என்று அண்ணாமலை கருதியதாக தெரிகிறது. ஆனால் தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதால் அண்ணாமலை மாநில அரசியலில் இருந்து வெளியேற்றப்பட்டுவிட்டதாக பேசப்படுகிறது.

இருந்தாலும் அண்ணாமலை பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று புதுச்சேரியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, பின்னர் திடீரென டெல்லி புறப்பட்டார். இதற்கான பின்னணி தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை. அவருக்கு தேசிய அளவில் பதவி அளிக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அண்ணாமலை தேர்தலில் போட்டியிடாதது தொடர்பாக கனிமொழியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கனிமொழி, திமுக ஏன் தேர்தலை கண்டு பயப்பட வேண்டாம். தேர்தலில் வெற்றிபெற வாய்ப்பில்லை என்பதால் தான் அண்ணாமலை தேர்தலிலேயே நிற்கவில்லை. திமுக நம்பிக்கையோடு வெற்றி எங்களுக்கு என்று பணியாற்றி வருகிறோம். அவர்களுக்கு தான் பயம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory