» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சாத்தான்குளம் வழக்கில் எடப்பாடியார் எடுத்த முடிவுக்குக் கிடைத்த நீதி : அதிமுக வரவேற்பு
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 4:23:16 PM (IST)

இந்தியாவையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை, மகன் கஸ்டடி மரண வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 காவலர்களுக்கும் மரண தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வரவேற்றுள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் காவலில் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. இவ்வழக்கில்: முன்னாள் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டது.
முன்னாள் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு ₹84 லட்சம் அபராதமும், மற்ற காவலர்களுடன் சேர்த்து மொத்தம் ₹1.40 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத் தொகையை உயிரிழந்த பென்னிக்ஸின் தாயார் செல்வராணிக்கு இழப்பீடாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"எடப்பாடியார் எடுத்த முடிவுக்குக் கிடைத்த நீதி"
இந்தத் தீர்ப்பை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வரவேற்றுள்ளது. இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்: "சாத்தான்குளம் வழக்கை அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் சிபிஐ விசாரணைக்கு மாற்றியதன் விளைவாகவே இன்று நியாயமான தீர்ப்பு கிடைத்துள்ளது. காவல் மரணங்களை அதிமுக ஒருபோதும் ஆதரித்ததில்லை என்பதற்குப் பாரபட்சமற்ற இந்த விசாரணையே சாட்சி. திமுக ஆட்சியில் நடந்த காவல் மரணங்களுக்கும், விரைவில் அமையப்போகும் அதிமுக ஆட்சியில் உரிய நீதி நிலைநாட்டப்படும்," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறிழைத்த அதிகாரிகளுக்கும் தண்டனை வேண்டும்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது 'எக்ஸ்' (X) தளத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நீதிக்காகப் போராடிய ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினர் மற்றும் ஆதாரங்களை நிரூபித்த சிபிஐ அதிகாரிகளுக்குப் பாராட்டுகள்.
"தனிப்பட்ட முறையில் நான் மரண தண்டனைக்கு எதிரானவன். கொடுங்குற்றம் செய்தவர்கள் ஆயுள் முழுவதும் எவ்வித சலுகையுமின்றி சிறையில் உழைக்க வேண்டும் என்பதே என் விருப்பம். அத்துமீறிய 9 காவலர்களால் இன்று அவர்களது குடும்பத்தினரும் தண்டனையை அனுபவிக்கின்றனர்."
"காயமடைந்தவர்களைப் பார்க்காமல் சான்றிதழ் அளித்த மருத்துவர், ரிமாண்ட் செய்ய உத்தரவிட்டவர் மற்றும் உண்மையை மறைக்க முயன்ற அதிகாரிகள், ஆட்சியாளர்களுக்கும் தண்டனை கிடைக்க வேண்டும் என என் மனம் ஏங்குகிறது.அதிகார மமதையில் அப்பாவி மக்களுக்கு எதிராக நிகழும் கொடுமைகள் இனிமேலாவது ஒழிக்கப்பட வேண்டும்" என கமல்ஹாசன் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்காளர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்பட வேண்டும் : அதிமுக வேட்பாளரின் பேச்சால் சர்ச்சை!
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:51:43 PM (IST)

திருநெல்வேலியில் தேர்தல் விழிப்புணர்வு சதுரங்கப் போட்டி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:08:41 PM (IST)

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஜூன் 15-ஆம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 20, ஏப்ரல் 2026 3:37:26 PM (IST)

வாக்குப்பதிவு நாள் வரை 144 தடை உத்தரவு: தேர்தல் விதிமுறைகளை மீறினால் 2 ஆண்டு சிறை!
திங்கள் 20, ஏப்ரல் 2026 3:19:19 PM (IST)

தென் மாநிலங்களின் ஆதரவு இல்லாமலேயே பாஜக மத்தியில் ஆட்சி அமைக்கும்: வைகோ எச்சரிக்கை!
திங்கள் 20, ஏப்ரல் 2026 12:07:56 PM (IST)

திமுகவை எதிர்த்தால்தான் வளர முடியும் என்பது தவறு: விஜய் குறித்து முதல்வர் விளக்கம்!
திங்கள் 20, ஏப்ரல் 2026 11:29:33 AM (IST)

