» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பக்கத்து வீட்டில் 15 பவுன் நகை திருடிய வாலிபர் கைது : 24 மணி நேரத்தில் போலீஸ் அதிரடி!
ஞாயிறு 15, மார்ச் 2026 10:13:08 AM (IST)
உடன்குடி அருகே புதுமனை வடக்குத் தெருவில், பக்கத்து வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்கம் மற்றும் பணத்தைத் திருடிச் சென்ற வாலிபரை குலசேகரன்பட்டினம் காவல்துறையினர் கைது செய்து, நகைகளை மீட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி புதுமனை வடக்குத் தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பேச்சிமுத்து (37). இவரது மனைவி காளியம்மாளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், சிகிச்சைக்காக இருவரும் கடந்த 9-ஆம் தேதி நாகர்கோவிலில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றிருந்தனர். அன்று இரவு 7 மணியளவில் அவர்கள் வீடு திரும்பியபோது, வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 15 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 25,000 ரொக்கம் திருடப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து பேச்சிமுத்து அளித்த புகாரின் பேரில், திருச்செந்தூர் ஏ.எஸ்.பி. மகேஷ் குமார் உத்தரவின்படி, குலசேகரன்பட்டினம் இன்ஸ்பெக்டர் பிரபுபாஸ்கரன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ரேணுகா ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சந்தேகத்தின் அடிப்படையில் பேச்சிமுத்துவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் சின்னத்துரை (28) என்பவரைப் பிடித்துப் போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில், தம்பதியினர் வீட்டில் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு சின்னத்துரை தான் நகைகளைத் திருடியதை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து சின்னத்துரையைக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்த 15 பவுன் நகைகளையும் மீட்டனர். புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியைக் கண்டுபிடித்து நகைகளை மீட்ட காவல்துறையினரின் துரித நடவடிக்கையைப் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ஞாயிறு 15, மார்ச் 2026 10:35:31 AM (IST)

பெட்ரோல் நிலையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு : டி.ஜி.பி.க்கு விற்பனையாளர்கள் சங்கம் கடிதம்!
ஞாயிறு 15, மார்ச் 2026 10:29:44 AM (IST)

தொழிலதிபரிடம் ரூ.25 கோடி மோசடி : நெல்லை திமுக கவுன்சிலரின் கணவர் கைது!
ஞாயிறு 15, மார்ச் 2026 9:47:30 AM (IST)

ஆளில்லாத ரயில்வே கேட்டில் கல்லூரிப் பேருந்து மீது ரயில் மோதல் - 23 மாணவர்கள் படுகாயம்!
ஞாயிறு 15, மார்ச் 2026 9:43:47 AM (IST)

சூட்கேசில் கத்தரிக்கோல்: விஜய் பயணம் செய்த விமானம் சுமார் 30 நிமிடம் தாமதம்!
ஞாயிறு 15, மார்ச் 2026 9:34:20 AM (IST)

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடமாட்டேன் : வைகோ உறுதி!
ஞாயிறு 15, மார்ச் 2026 8:46:20 AM (IST)

