» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பத்திரிகையாளர் ஓய்வூதியம் உயர்வு: அமைச்சர் கீதா ஜீவனிடம் தூத்துக்குடி செய்தியாளர்கள் நன்றி!

சனி 14, மார்ச் 2026 9:13:30 PM (IST)



பத்திரிகையாளர்களின் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தூத்துக்குடி மாவட்டப் பத்திரிகையாளர்கள் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவனை நேரில் சந்தித்து நன்றி கூறினர்.

தமிழகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர் சங்கங்களின் நீண்டகாலக் கோரிக்கைகளை ஏற்று, தமிழக அரசு அண்மையில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி: பத்திரிகையாளர்களின் மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 12,000-லிருந்து ரூ. 15,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குடும்ப ஓய்வூதியம் ரூ. 6,000-லிருந்து ரூ. 7,500-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அங்கீகார அடையாள அட்டை வைத்துள்ள அனைவருக்கும் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் மூலம் வீட்டுமனைகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த அறிவிப்புகளுக்காகத் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தூத்துக்குடி பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம் மற்றும் செய்தியாளர் ஜெகஜீவன் ஆகியோர், போல்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான கீதா ஜீவன் அவர்களை நேரில் சந்தித்தனர்.

அப்போது, தூத்துக்குடி மாவட்டப் பத்திரிகையாளர்களுக்கு மானிய விலையில் வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஏற்கனவே அளிக்கப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சரிடம் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

இந்தச் சந்திப்பின் போது மாநகராட்சி மண்டலத் தலைவர் வக்கீல் பாலகுருசாமி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமி நாதன், அமைச்சரின் நேர்முக உதவியாளர்கள் கல்யாண சுந்தரம், மணி ஆகியோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory