» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாரத்நெட் திட்டத்தில் தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு: நிதி தகுதி தளர்வு - ஆட்சியர் தகவல்!

சனி 14, மார்ச் 2026 5:38:31 PM (IST)

தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET), பாரத்நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களுக்கு உயர்தர இணைய சேவைகளை வழங்க மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை (DLFP) தேர்வு செய்து வருகிறது. 

இதற்கான விண்ணப்பப் பதிவில் முக்கிய மாற்றங்கள் மற்றும் கால நீட்டிப்பு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் இரா. சுகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கடந்த 01.01.2026 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், விண்ணப்பதாரர்களின் கடந்த மூன்று ஆண்டுகளின் சராசரி ஆண்டு வருவாய் 50 லட்சம் ரூபாயாக இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது அதிகப்படியான விண்ணப்பதாரர்கள் பங்கேற்கும் வகையில், இந்த நிதித் தகுதி 20 லட்சம் ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பாரத்நெட் திட்டப் பணிகள் தற்போது 96% நிறைவடைந்துள்ளன. 37 மாவட்டங்களிலும் ஒவ்வொரு மாவட்டமும் வருவாய் உட்கோட்டம் அடிப்படையில் 2 முதல் 6 வட்டாரங்களைக் கொண்ட துணைப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு விண்ணப்பதாரர் அதிகபட்சம் இரண்டு மாவட்டங்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்கும் மாவட்டம், அந்த நிறுவனம் அல்லது தனிநபர் செயல்படும் மாவட்டமாக இருக்க வேண்டும். இணையக் கேபிள்கள் (OFC) மற்றும் கருவிகளை (ONT) பராமரித்தல், தடையில்லா இணையச் சேவை மற்றும் பழுதுகளை விரைந்து சரிசெய்தல்.

விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ளவர்கள் https://tanfinet.tn.gov.in என்ற இணையதள போர்டல் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் பாதுகாப்பு வைப்புத் தொகையாக 25,000 ரூபாய் (திரும்பப் பெறக்கூடியது) செலுத்த வேண்டும். தேர்வு செய்யப்படும் பங்கீட்டாளர்கள், ஒவ்வொரு வட்டாரத்திற்கும் 2,00,000 ரூபாய் பாதுகாப்பு வைப்புத் தொகை செலுத்திய பின் பணி ஆணை வழங்கப்படும்.

இணையதள போர்டல் திறப்பு: 10.03.2026 முதல் 10.04.2026 வரை. ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள்: ஏற்கனவே கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தவர்கள் அதே வருவாய் உட்கோட்டத்திற்கு மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. இருப்பினும், அதே மாவட்டத்தில் உள்ள பிற துணைப் பிரிவுகளுக்கு அவர்கள் புதிதாக விண்ணப்பிக்கலாம். மேலதிக விவரங்களுக்கு 044-24965595 என்ற உதவி மைய எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory