» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
எரிபொருள் தட்டுப்பாடு: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க இபிஎஸ் வலியுறுத்தல்!
செவ்வாய் 10, மார்ச் 2026 3:26:34 PM (IST)
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக இந்தியாவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க, மத்திய மற்றும் மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: ஈரான் - இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக, பெட்ரோலியப் பொருட்களை இந்தியாவுக்குக் கொண்டு வருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதன் விளைவாக, வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டிற்கான சிலிண்டர் விநியோகத்தைத் தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், திரவ பெட்ரோலிய வாயுவிற்கு (LPG) மாற்றாக வேறு எரிபொருளைப் பயன்படுத்துமாறும் அந்நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர்கள் கிடைக்காததால், உணவகங்கள் மற்றும் தேநீர்க் கடைகள் மூடப்பட்டு வருகின்றன. இந்தத் தட்டுப்பாடு மேலும் தீவிரமடையாமல் இருக்க, மத்திய அரசு உரிய தலையீடு செய்து, தகுந்த நேரத்தில் சிலிண்டர்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மாநில அரசுக்குக் கோரிக்கை
அதேபோல், தமிழக அரசு மக்களிடையே நிலவும் தேவையற்ற அச்சத்தைப் போக்க முன்வர வேண்டும். பொறுப்புள்ள மாநில அரசாக, உணவகங்கள் தடையின்றி இயங்குவதற்குத் தேவையான எரிவாயு ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும்.
மேலும், ஏழை எளிய மக்கள் இந்தப் பாதிப்பால் உணவின்றித் தவிக்கக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, அம்மா உணவகங்களை முழு வீச்சில் இயங்க வைக்க வேண்டும். எவ்விதத் தடையுமின்றி ஏழை மக்களுக்கு உணவு கிடைப்பதை திமுக அரசு உறுதி செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசரக் கடிதம்!
செவ்வாய் 10, மார்ச் 2026 4:26:06 PM (IST)

கோவில் சொத்துக்களும் உருக்கிய தங்கமும் எங்கே? - சேகர்பாபுவுக்கு அண்ணாமலை சரமாரி கேள்விகள்!
செவ்வாய் 10, மார்ச் 2026 4:02:52 PM (IST)

தென்னிந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடு: மத்திய அரசு தலையிட கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
செவ்வாய் 10, மார்ச் 2026 3:49:14 PM (IST)

காவல்துறையில் குறிப்பிட்ட சமூகத்தின் ஆதிக்கம்? ஷியாம் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!
செவ்வாய் 10, மார்ச் 2026 3:14:37 PM (IST)

கொசுவர்த்தி சுருளால் தீ விபத்து : கணவன், மனைவி, குழந்தை உயிரிழப்பு
செவ்வாய் 10, மார்ச் 2026 12:41:21 PM (IST)

தம்பிதுரை கல்வி நிறுவன ஆக்கிரமிப்பு: 12 வாரங்களில் நிலத்தை மீட்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
செவ்வாய் 10, மார்ச் 2026 12:21:31 PM (IST)

