» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பிளஸ்-2 தேர்வுக்கு மினி ஜெராக்ஸ் பிட்: ஜெராக்ஸ் கடைகளுக்கு கல்வி அதிகாரி கடும் எச்சரிக்கை!
செவ்வாய் 3, மார்ச் 2026 8:00:20 AM (IST)
நெல்லையில் பிளஸ்-2 பொதுத்தேர்வின் போது விடைகளை ‘மினி ஜெராக்ஸ்’ எடுத்து வந்த மாணவர்களால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜெராக்ஸ் கடைகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தமிழ் பாடத்துடன் தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 73 தேர்வு மையங்களில் 19,835 மாணவ-மாணவிகள் தேர்வில் பங்கேற்றனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் தலைமையில் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.தேர்வு தொடங்குவதற்கு முன்பாக ஒருசில பள்ளிகளில் பறக்கும் படையினர் ஆய்வு செய்தனர். அப்போது தேர்வு அறைக்குள் நுழையவிருந்த மாணவர்களைச் சோதனை செய்தபோது, ஒருசிலர் ‘பிட்’ அடிக்கும் நோக்கத்தில் புத்தகங்கள் மற்றும் கைடுகளில் உள்ள விடைகளைச் சிறிய அளவிலான ‘மினி ஜெராக்ஸ்’ எடுத்து வைத்திருந்ததை அதிகாரிகள் கையும்களவுமாகப் பிடித்தனர். அந்த ஜெராக்ஸ்களைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், மாணவர்களை எச்சரித்துத் தேர்வு எழுத அனுமதித்தனர்.
ஜெராக்ஸ் கடைகளுக்கு ‘சீல்’ வைக்க உத்தரவு:
மாணவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குறிப்பிட்ட சில கடைகளில் இந்த மினி ஜெராக்ஸ்கள் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கடைகளுக்குச் சென்று எச்சரிக்கை விடுத்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சிவகுமார் கூறியதாவது:
"நெல்லை மாவட்டத்தில் உள்ள எந்த ஒரு ஜெராக்ஸ் கடையிலும் மாணவர்கள் 'பிட்' அடிப்பதற்காக மினி ஜெராக்ஸ் போட்டுக் கொடுக்கக் கூடாது. இதை மீறி செயல்படும் கடைகள் உடனடியாக மூடி ‘சீல்’ வைக்கப்படுவதோடு, உரிமையாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும். இத்தகைய கடைகளை போலீஸார் ரகசியமாக கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது".
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மேற்கு ஆசியப் போர்: வளைகுடா நாடுகளில் தவித்த 217 இந்தியர்கள் சென்னை வருகை!
செவ்வாய் 3, மார்ச் 2026 10:35:58 AM (IST)

திருவண்ணாமலையில் மாசி மாத பவுர்ணமி கிரிவலம்: சந்திர கிரகணத்திலும் நடை திறப்பு!
செவ்வாய் 3, மார்ச் 2026 10:28:33 AM (IST)

தீப்பெட்டி குடோனில் தீ விபத்து: ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
செவ்வாய் 3, மார்ச் 2026 8:12:59 AM (IST)

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மார்ச் 23-ல் தீர்ப்பு: நீதிமன்றம் அறிவிப்பு
செவ்வாய் 3, மார்ச் 2026 8:07:02 AM (IST)

பெண் கொடூர கொலை: மது குடிக்கப் பணம் தராத ஆத்திரத்தில் மகன் வெறிச்செயல்!
செவ்வாய் 3, மார்ச் 2026 7:44:34 AM (IST)

தாய்மைப் பருவத்தை தள்ளிப்போடாதீர்கள்: அமைச்சர் பி. கீதா ஜீவன் அறிவுரை!
திங்கள் 2, மார்ச் 2026 5:47:32 PM (IST)

