» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காவல் நிலையத்தில் இளைஞர்கள் மீது பொய் வழக்கு : டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் ஆஜர்!

வெள்ளி 30, ஜனவரி 2026 10:10:13 AM (IST)

தச்சநல்லூர் காவல் நிலையத்தில் இளைஞர்கள் மீது பொய் வழக்கு பதியப்பட்டதாக மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் அளித்த மனு அடிப்படையில்  நாங்குநேரி காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர் ஆஜராகினர்.

திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூர் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆணையர் உத்தரவு அடிப்படையில் தச்சநல்லூர் பால் கட்டளை  பகுதியினை சார்ந்த கணேசன்,கனகராஜ், கோமதிசங்கர், முருகேசன், முனியசாமி, மற்றும் பிரியா  உள்ளிட்ட 6 பேர் மீது பொய்யான வழக்கினை பதிவு செய்திருந்தனர். 

மேற்படி பொய் வழக்கினை ரத்து செய்ய கோரி பாதிக்கப்பட்ட கணேசன், கனகராஜ், கோமதிசங்கர், முருகேசன் ஆகியோர் மாநில ஆதிதிராவிடர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். முன்னதாக இதனையறிந்த தச்சநல்லூர் காவல் நிலைய குற்றபிரிவு ஆய்வாளர் சுந்தரி அவர்கள் முறையாக விசாரணை செய்து வழக்கினை ரத்து செய்து கோப்புகளை ஆணையத்தில் சமர்பித்தார். 

மேற்படி மனுவினை கோப்புக்கு எடுத்துக் கொண்ட  ஆணையத் தலைவர் அப்போதைய காவல் உதவி ஆணையரும் தற்போதைய நாங்குநேரி துணை கண்காணிப்பாளர் தர்ஷிகா நடராஜன் மற்றும் காவல் ஆய்வாளர் முத்து கணேஷ் ஆகியோர் இன்று நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தனர். அதன் பேரில் மேற்படி இருவரும் இன்று நேரில் ஆஜராகினர். மேலும் கூடுதலாக வழக்கு பதிவு செய்த தச்சநல்லூர் ஆய்வாளர் (பொறுப்பு) தற்போது திருநெல்வேலி மதுவிலக்கு ஆய்வாளர் இந்திரா ஆகிய மூவரும் நேரில் 11.2. 2026ல் ஆஜராக உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory