» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
உரிய நேரத்தில் சிறந்த கூட்டணியை அறிவிப்போம் : தென்காசியில் பிரேமலதா பேட்டி
வெள்ளி 30, ஜனவரி 2026 8:28:10 AM (IST)
அனைத்தும் தோழமைக் கட்சிகள் தான், உரிய நேரத்தில் சிறந்த கூட்டணியை அறிவிப்போம் என தென்காசியில் பிரேமலதா கூறினார்.
‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்கின்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நேற்று காலை தனது மகனும், இளைஞர் அணி செயலாளருமான விஜய பிரபாகரனுடன் குற்றாலநாதர் கோவிலிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
அதன்பிறகு பிரேமலதா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ‘‘தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகவும் சீர்குலைந்துவிட்டது. சென்னையில் வட மாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பமே கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்’’ என்றார்.
தேர்தலில் கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்து அவர் கூறியதாவது: அனைத்தும் தோழமைக் கட்சிகள் தான். உரிய நேரத்தில் எங்கள் கட்சிக்கும், எதிர்காலத்திற்கும் சிறந்த கூட்டணியை அறிவிப்போம். தமிழகத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 4 முனை போட்டி நிலவ வாய்ப்புள்ளது. தே.மு.தி.க. இந்த தேர்தலில் தனித்து போட்டியிடாது. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சரியான நேரத்தில், சரியான கூட்டணி அமைத்து அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இன்று (வெள்ளிக்கிழமை) பிரேமலதாவும், விஜய பிரபாகரனும் நெல்லைக்கு வருகிறார்கள். அவர்கள் நெல்லை தச்சநல்லூர் மதுரை ரோட்டில் உள்ள அமோகா பேலசில் காலை 11 மணிக்கு நடைபெறும் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை நெல்லை மாநகர மாவட்ட தே.மு.தி.க செயலாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாஜக சுற்றுப்பயண பொறுப்பாளர்களாக எல்முருகன், தமிழிசை, அண்ணாமலை நியமனம்!
வெள்ளி 30, ஜனவரி 2026 10:56:48 AM (IST)

அரசு கல்லூரியில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை: கேன்டீன் உரிமையாளர் உட்பட 3 பேர் கைது
வெள்ளி 30, ஜனவரி 2026 10:26:17 AM (IST)

காவல் நிலையத்தில் இளைஞர்கள் மீது பொய் வழக்கு : டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் ஆஜர்!
வெள்ளி 30, ஜனவரி 2026 10:10:13 AM (IST)

வாழ்க்கையை தீவிரமாக எடுத்துக்கொள்ளக் கூடாது: ஆன்மீக குரு ரவிசங்கர் பேச்சு!
வெள்ளி 30, ஜனவரி 2026 8:32:42 AM (IST)

புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட தீர்மானம் : தமிழக முதல்வருக்கு ஆயர் கடிதம்!
வியாழன் 29, ஜனவரி 2026 8:19:25 PM (IST)

புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!
வியாழன் 29, ஜனவரி 2026 7:53:46 PM (IST)

