» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!
வியாழன் 29, ஜனவரி 2026 7:53:46 PM (IST)

தென்னகத்து பதுவை, கோடி அற்புதர் என மக்களால் அழைக்கப்படும் புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!
புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் இறுதியில் தொடங்கும். இந்த ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பாளை மறைவட்ட அதிபர் பேராலய அருட்தந்தை அந்தோணிவியாகப்பன் தலைமையில் கொடி மந்திரிக்கப்பட்டு பின்னர் பவனியாக கொண்டு வரப்பட்டு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து திருப்பலி, மறையுரை நடைபெற்றது.
தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடைபெறும். 12-ம் திருநாளான பிப்ரவரி 9-ஆம் தேதி (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் திருப்பலி, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது. தொடர்ந்து தேர்பவனி நடைபெறும்.
13-ம் திருநாளான 10-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11.45 மணிக்கு மதுரை மறைமாவட்ட முன்னாள் ஆயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் திருவிழா திருப்பலி நடைபெறுகிறது. 11-ஆம் தேதி காலையில் கொடியிறக்க நன்றி திருப்பலி நடைபெறும்.
திருவிழாவில் தமிழகம் மற்றும் இன்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விழா ஏற்பாடுகளை ஆலய அதிபரும், பங்குத்தந்தையுமான மோட்சராஜன், உதவி பங்குத்தந்தை சந்தியாகு, ஆன்மிக தந்தைகள் சகாயதாசன், பீட்டர் பிச்சைக்கண் மற்றும் அருட்சகோதரிகள், இறைமக்கள் செய்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட தீர்மானம் : தமிழக முதல்வருக்கு ஆயர் கடிதம்!
வியாழன் 29, ஜனவரி 2026 8:19:25 PM (IST)

நெல்லை தொகுதியில் பாஜக சார்பில் மீண்டும் போட்டி: நயினார் நாகேந்திரன் பேட்டி!
வியாழன் 29, ஜனவரி 2026 4:43:56 PM (IST)

அதிமுகவில் மீண்டும் இணைய ஓபிஎஸ் விருப்பம்: எடப்பாடி பழனிசாமி ஏற்க மறுப்பு!
வியாழன் 29, ஜனவரி 2026 4:21:38 PM (IST)

விஜய் தலைமையில் மக்களாட்சியை அமைக்க உறுதி ஏற்போம் : என்.ஆனந்த் அறிக்கை!
வியாழன் 29, ஜனவரி 2026 11:43:31 AM (IST)

கால்நடை ஆய்வாளர் பணியிடத்துக்கான தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு
வியாழன் 29, ஜனவரி 2026 11:26:57 AM (IST)

தாமதமான நடவடிக்கை என்றாலும், யுஜிசி விதிகளில் மாற்றம் வரவேற்கத்தக்கது: முதல்வர் ஸ்டாலின்
வியாழன் 29, ஜனவரி 2026 11:11:32 AM (IST)

