» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நிதி நிறுவன உரிமையாளரை மிரட்டி நகை, செல்போன் பறிப்பு: தந்தை-மகன் கைது

வியாழன் 22, ஜனவரி 2026 8:10:07 AM (IST)

நெல்லையில் நிதி நிறுவன உரிமையாளரை மிரட்டி நகை, செல்போன் பறித்த தந்தை- மகனை போலீசார் கைது செய்தனர்.

கரூரைச் சேர்ந்தவர் சரத்குமார் (32). இவர் நெல்லை தெற்கு புறவழிச்சாலையில் குறிச்சி பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இங்கு மர்மநபர்கள் 2 பேர் வந்தனர். அவர்கள் அரிவாளைக் காட்டி மிரட்டி, சரத்குமார் அணிந்திருந்த 2½ பவுன் தங்க மோதிரம், 5 செல்போன்களை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து சரத்குமார் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் தங்கதுரை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அந்த பகுதி கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

போலீஸ் விசாரணையில், சரத்குமாரிடம், கடந்த 2024-ம் ஆண்டு ஆறுமுகசுந்தரம் என்பவர் மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக நிதி உதவி பெற்று, இதுவரை செலுத்த வேண்டிய தொகையை திருப்பி செலுத்தவில்லை. இதையொட்டி அந்த மோட்டார் சைக்கிளை சரத்குமார் பறிமுதல் செய்து வைத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆறுமுகசுந்தரத்தின் நண்பரான தச்சநல்லூர் சிதம்பர நகரைச் சேர்ந்த மணிகண்டன் (25), அவருடைய தந்தை கணேசன் (60) ஆகியோர் சரத்குமார் அலுவலகத்திற்குள் புகுந்து அவதூறாக பேசி நகை, செல்போன்களை பறித்து சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக மணிகண்டன், கணேசன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory