» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரயிலில் பயணி தவறவிட்ட ரூ.6 லட்சம் பொருட்கள் மீட்பு: துரிதமாக செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டு!

வியாழன் 22, ஜனவரி 2026 8:08:40 AM (IST)

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணி தவறவிட்ட ரூ.6 லட்சம் மதிப்புள்ள பொருட்களை போலீசார் மீட்டு ஒப்படைத்தனர். 

சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர் கட்டளை சுப்பிரமணியன் (59). இவர், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் நேற்று காலை தாம்பரம் வந்தார். அப்போது ரயிலில் இருந்து இறங்கும் அவசரத்தில் தனது பையை ரயிலிலேயே தவறவிட்டார். பின்னர், சிறிது நேரத்திற்கு பிறகு தனது பை காணாமல் போனதை கண்டு சுப்பிரமணியன் அதிர்ச்சியடைந்தார். 

இதுதொடர்பாக, தாம்பரம் ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகத்தில் அவர் புகார் அளித்தார். அந்த பையில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள ஆவணங்கள், ரொக்க பணம், வங்கி கார்டுகள், 2 கைக்கெடிகாரங்கள் உள்ளிட்ட சுமார் ரூ.6 லட்சம் மதிப்பிலான பொருட்கள் இருந்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். உடனடியாக தாம்பரம் ரயில்வே பாதுகாப்பு படையினர், எழும்பூர் ஆர்.பி.எப். அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர்.

உடனே, எழும்பூர் போலீசார் ரயில் எழும்பூர் வந்ததும், ரயிலில் சோதனை நடத்தி ரயிலில் இருந்த பையை பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட பொருட்கள் எழும்பூர் ஆர்.பி.எப். அலுவலகத்தில் வைத்து சுப்பிரமணியனிடம் ஒப்படைக்கப்பட்டது. துரிதமாக செயல்பட்டு தனது வாழ்நாள் சேமிப்பு ஆவணங்களை மீட்டுக் கொடுத்த போலீசாருக்கு, சுப்பிரமணியன் நெகிழ்ச்சியுடன் நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory