» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் பொங்கல் விழா கோலாகலம்: ஆலயங்களில் சிறப்பு வழிபாடு
வியாழன் 15, ஜனவரி 2026 3:45:54 PM (IST)

தூத்துக்குடி மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் தமிழர் திருநாளான தைப்பொங்கல் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது இதை தொடர்ந்து வீடுகளில் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபட்ட பொதுமக்கள் புத்தாடை அணிந்து ஆலயங்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்
தூத்துக்குடியில் உள்ள பழமையான பாகம் பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆலய வளாகத்தில் செங்கரும்புகளால் அலங்காரம் செய்யப்பட்டு சுவாமி மற்றும் அம்பாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றபடி அம்பாள் மற்றும் சாமியை தரிசனம் செய்து வருகின்றனர்
தூத்துக்குடியில் உள்ள லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று அதிகாலையில் ஆலயத்திற்கு வந்த கிறிஸ்தவ மக்கள் ஆலயத்தில் வண்ண கோலமிட்டு, கரும்பு, காய்கறி, பழங்கள் படைத்து பாரம்பரியமாக புது பானையில். ஓலை வைத்து பொங்கல் வைத்து பொங்கல் திருநாளை உற்சாகமாக கொண்டாடினர்.

இதை தொடர்ந்து பங்குத்தந்தை செல்வன் பெர்னான்டோ தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் இந்த ஆண்டு எந்த விதமான இயற்கை சீற்றங்கள் இன்றி அனைத்து தரப்பு மக்களும் விவசாயம் செழிக்க வேண்டிய அனைத்து நன்மைகளும் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய நலமாக வாழ வேண்டுமென பிரார்த்தனையும் செய்தனர். ஏராளமான இறை மக்கள் கலந்து கொண்டனர். பின்னர் விளையாட்டு போட்டிகள் பானை உடைத்தல், கும்மியடித்தல், சிலம்பாட்டம் மற்றும் பலூன் உடைத்தல் நடைபெற்றன அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி நாள்: அடுத்த மாதம் 17-ஆம் தேதி இறுதி பட்டியல்!!
ஞாயிறு 18, ஜனவரி 2026 9:34:05 AM (IST)

கல்லால் தாக்கி வங்கி ஊழியர் உள்பட 2 பேர் கொடூரக் கொலை: கஞ்சா போதை ஆசாமிகள் வெறிச்செயல்
ஞாயிறு 18, ஜனவரி 2026 9:26:09 AM (IST)

ஜனநாயகன் படம் வெற்றிகரமாக வெளிவரும்: ஜீவா பேட்டி
ஞாயிறு 18, ஜனவரி 2026 9:03:49 AM (IST)

திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்கள் விலை உயா்வு: கூட்டம் அலைமோதல்!
ஞாயிறு 18, ஜனவரி 2026 8:25:24 AM (IST)
_1768652448.jpg)
ஆண்களுக்கு இலவச பஸ் பயணம் யாராவது கேட்டார்களா? சீமான் விமர்சனம்!
சனி 17, ஜனவரி 2026 5:51:10 PM (IST)

ஆத்தூர் அருகே மஞ்சுவிரட்டில் காளை முட்டி பெண் உள்பட 2 பேர் பலி!
சனி 17, ஜனவரி 2026 5:40:14 PM (IST)

