» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த இருவர் கைது : இரு சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைப்பு!

செவ்வாய் 3, மார்ச் 2026 9:20:48 PM (IST)

கோவில்பட்டியில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த இரு வாலிபர்களைப் போலீசார் கைது செய்தனர். அவர்களுடன் இருந்த இரு இளஞ்சிறார்கள் நெல்லை கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் மாரியப்பன் தலைமையில், சிறப்பு சார்பு ஆய்வாளர் அர்ஜுனராஜ் மற்றும் போலீசார் இன்று (03.03.2026) சங்கரலிங்கபுரம் முதல் மூப்பன்பட்டி வரை செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்குள்ள ஒரு தீப்பெட்டி தொழிற்சாலை அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நான்கு பேர் நின்று கொண்டிருந்தனர்.

போலீசார் அவர்களைப் பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த சேதுபதி பாண்டியன் (22), பாலமுருகன் (23) மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த 17 வயதுடைய இரு இளஞ்சிறார்கள் என்பது தெரியவந்தது. மேலும், அவர்களிடம் சட்டவிரோதமாக வைத்திருந்த மூன்று அரிவாள்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இச்சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, சேதுபதி பாண்டியன் மற்றும் பாலமுருகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதில் தொடர்புடைய இரு இளஞ்சிறார்கள் திருநெல்வேலியில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில், துரிதமாகச் செயல்பட்டு எதிரிகளைக் கைது செய்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசாரைத் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன்  வெகுவாகப் பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory