» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆசிரியர் சங்க நிர்வாகிகளை விடுவிக்க வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

செவ்வாய் 13, ஜனவரி 2026 5:23:27 PM (IST)

வீட்டுச் சிறை​யில் வைக்​கப்​பட்​டுள்ள இடைநிலை ஆசிரியர் சங்க நிர்​வாகி​களை உடனடி​யாக விடு​தலை செய்ய வேண்​டும்’ என அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

https://www.tutyonline.net/npic_b/a6b80ab31fe861c8163b9956d44b1e8e/npb/edappadi4i_1768305140.jpgஇது தொடர்​பாக அவர் தனது எக்ஸ் தள பக்​கத்​தில் வெளி​யிட்ட பதி​வில் "திமுக அளித்த தேர்​தல் வாக்​குறுதி எண். 311 (சம வேலைக்கு சம ஊதி​யம்) நிறைவேற்றக் கோரி தொடர்ந்து 17-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராடி வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில் இடைநிலை ஆசிரியர்கள் சங்க மாநில நிர்​வாகி​களான ராபர்ட், ரெக்ஸ் ஆனந்​தகு​மார், கண்​ணன் உள்​ளிட்ட 8 பேரை, நேற்று முன்​தினம் காலை 8 மணி​யள​வில் இருந்து வீட்டு சிலை​யில் திமுக அரசு வைத்​துள்​ளது. சுமுக​மான முறை​யில் போராட்​டத்தை எதிர்​கொள்​ளத் தெரி​யாமல், இப்​படி சட்​டத்​துக்கு புறம்​பான வகை​யில் கைது நடவடிக்கைகளில் ஈடு​படு​வதும், அவர்​களின் செல்​போனைப் பறிப்​பதும் கடும் கண்​டனத்​துக்​குரியது.

கைது செய்​யப்​பட்​டு, வீட்​டுச் சிறை​யில் உள்​ளோருக்கு சிறு தீங்கு நேர்ந்​தா​லும், அதற்கு முழு பொறுப்​பும் முதல்​வர் ஸ்டா​லின் ஏற்க வேண்​டும். அறவழி​யில் போராடியதற்​காக, ஆசிரியர்களைக் கைது செய்​து, மறைத்து வைத்து துன்​புறுத்​து​வது கண்​டிக்​கத்​தக்​கது. கைது செய்​யப்​பட்​டுள்ள ஆசிரியர்களை உடனடி​யாக விடு​தலை செய்​ய​ வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory