» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோவில்பட்டியில் களைகட்டிய பொங்கல் விழா : இளவட்டக்கல் தூக்கி அசத்திய மாணவர்கள்!

செவ்வாய் 13, ஜனவரி 2026 5:05:23 PM (IST)


கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த பொங்கல் விழாவில் மாணவர்கள் இளவட்டக்கல் தூக்கி அசத்தினர்.

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் மாட்டு வண்டியில் சென்று இளவட்டக்கல் தூக்கி அசத்தினர். மாணவிகள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று கும்மியடித்து உரலில் மஞ்சள் இடித்து தானியங்களை சொளவில் புடைத்து உறியடித்து பொங்கலிட்டனர்.

நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். உறுப்பினர்கள் அருண், சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார். மாணவ மாணவிகள் முளைப்பாரி சுமந்து கிராமிய பாடல்களை பாடி மாட்டு வண்டியில் சென்று பொங்கலிட்டு மகிழ்ந்தனர். இதில் கல்லூரி பேராசிரியர்கள் விஜய கோபாலன், செல்வ லட்சுமி, ரமேஷ், கற்குவேல்ராஜ், செல்வம், செல்லத்துரை, ஆனந்தகுமார், பிரியங்கா, மற்றும் மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory