» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பொங்கல் பண்டிகை விடுமுறை: 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிறப்பு பஸ்களில் பயணம்!

செவ்வாய் 13, ஜனவரி 2026 12:16:02 PM (IST)

பொங்கல் பண்டிகையடி முன்னிட்டு இதுவரை 11,372 பஸ்கள் இயக்கப்பட்டு, 4,88,780 பயணிகள் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "போக்குவரத்துத் துறையின் சார்பில், 2026-ஆம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொதுமக்களின் பயண வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதன் விவரமாக, 12.01.2026 அன்று நள்ளிரவு 24.00 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் 2,092 பஸ்கள் முழுமையாக இயக்கப்பட்டதுடன், கூடுதலாக 1,010 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம் 3,102 பஸ்கள் இயக்கப்பட்டு, 1,30,284 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

ஆக, 9.01.2026 முதல் 12.01.2026 அன்று நள்ளிரவு 24.00 மணி வரை, மொத்தம் 11,372 பஸ்கள் இயக்கப்பட்டு, 4,88,780 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். அத்துடன், இதுவரை 2,56,977 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

பொங்கல் திருநாள் பயண காலத்தில், பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் தொடர்ந்து இயக்கப்படும். எனவே, கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, பொதுமக்கள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory