» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருநெல்வேலியில் நாளை மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!
வெள்ளி 26, டிசம்பர் 2025 10:54:01 AM (IST)
பாளையங்கோட்டை புனித யோவான் கல்லூரியில் நாளை (டிச.27ம் தேதி) சனிக்கிழமை மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/ நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 10.01.2026 (சனிக்கிழமை) அன்று காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை புனித யோவான் கல்லூரி (St. John’s College) பாளையங்கோட்டையில் வைத்து நடைபெறவுள்ளது.
இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 5-ஆம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ. போன்ற கல்வித்தகுதியுடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். 100க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு வேலைநாடுநர்களை தேர்வு செய்யவுள்ளனர். இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது சுயவிபரம் (Resume), கல்விச்சான்று, ஆதார்அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாளில் காலை 09.00 மணிக்கு வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.
இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் தமிழ்நாடு அரசு தனியார் வேலைவாய்ப்பு இணையதளத்தில் (www.tnprivatejobs.tn.gov.in) தங்களது விவரங்களை பதிவு செய்தல் வேண்டும். முகாமில் பங்கேற்க விருப்பமுள்ள தனியார்துறை நிறுவனங்களும் (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதளத்தில் பதிவுசெய்வது அவசியமாகும். மேலும், வேலைவாய்ப்பு தொடர்பான பல்வேறு தகவல்களை பெற NELLAI EMPLOYMENT OFFICE என்ற Telegram channel –இல் இணைந்து பயன்பெறலாம்.
இம்முகாமில் பணிநியமனம் பெறும் பதிவுதாரர்களுடைய வேலைவாய்ப்பு பதிவுமூப்பு இரத்து செய்யப்படமாட்டாது எனவும் வேலைநாடுநர்கள் இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயனடையுமாறும் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இடியாப்பம் விற்க உரிமம் அவசியம் : தமிழக உணவு பாதுகாப்புத் துறை உத்தரவு
வெள்ளி 26, டிசம்பர் 2025 12:03:09 PM (IST)

அதிமுகவில் விருப்பமனு பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு: எடப்பாடி பழனிசாமிஅறிவிப்பு
வெள்ளி 26, டிசம்பர் 2025 11:23:40 AM (IST)

தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு முதன்மைச் செயலாளர்களாக பதவி உயர்வு!
வெள்ளி 26, டிசம்பர் 2025 11:19:37 AM (IST)

பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்: அன்புமணி அறிவிப்பு
வெள்ளி 26, டிசம்பர் 2025 10:59:30 AM (IST)

விசைத்தறிகளை நவீனமயமாக்கும் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் அழைப்பு!
வெள்ளி 26, டிசம்பர் 2025 10:36:34 AM (IST)

தித்வா புயலால் நீரோட்ட மாறுபாடு எதிரொலி: தனுஷ்கோடி கடலில் புதிய மணல் திட்டு!
வெள்ளி 26, டிசம்பர் 2025 8:39:32 AM (IST)


.gif)