» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர் : விபத்தை தவிர்க்க போலீசார் வழங்கினர்!!

வெள்ளி 26, டிசம்பர் 2025 8:34:53 AM (IST)



ஓட்டப்பிடாரம் அருகே இருக்கன்குடி, திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் பாதயாத்திரை பக்தர்களுக்கு விபத்தை தவிர்க்க ஒளிரும் ஸ்டிக்கர்களை போலீசார் வழங்கினர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு தென் மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும் தற்போது ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று வருகின்றனர்.

இந்த பாதயாத்திரை பக்தர்கள் மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலை மார்க்கமாக கோவிலுக்கு செல்கின்றனர். இந்த வகையில் தினமும் ஆயிரக்கணக்கான பாதயாத்திரை பக்தர்கள் இந்த சாலையோரத்தில் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கும், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கும் செல்கின்றனர். கடந்த காலங்களில் சாலையோரங்களில் செல்லம் பாதயாத்திரை பக்தர்கள் விபத்துகளில் சிக்கி வந்தனர்.

இந்நிலையில், ஓட்டப்பிடாரம் பகுதியில் பாதயாத்திரை பக்தர்கள் விபத்தில் சிக்குவதை தவிர்க்க போலீசார் ஒலிபெருக்கி மூலம் நான்கு வழிச்சாலையில் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். நேற்று எப்போதும்வென்றான் ேபாலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி தலைமையில் போலீசார் மதுரை-தூத்துக்குடி நான்குவழிச்சாலை ஓரத்தில் பாதயாத்திரை சென்ற பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்களை வழங்கி பாதுகாப்பாக பயணம் செய்ய அறிவுறுத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory