» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விசைத்தறிகளை நவீனமயமாக்கும் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் அழைப்பு!

வெள்ளி 26, டிசம்பர் 2025 10:36:34 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் சாதாரண விசைத்தறிகளை நவீனமயமாக்குதல் திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

விசைத்தறி துறையில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு விசைத்தறிகளை நவீனமயமாக்கும் திட்டம் (Powerloom Modernisation Scheme) மூலம் விசைத்தறிகளை மேம்படுத்தவும், புதிய ரேப்பியர் தறிகள் கொள்முதல் செய்யவும் மானியம் வழங்கப்படுகிறது. 

1. சாதாரண விசைத்தறிகளை ரேப்பியர் தறிகளாக மாற்ற 50% (அதிகபட்சம் ரூ.1 லட்சம்),

2. புதிய ரேப்பியர் தறிகள் கொள்முதல் செய்ய 20% (அதிகபட்சம் ரூ.1.5 லட்சம்), 

3. பொது வசதி மையம் அமைக்க 25% (அதிகபட்சம் ரூ.5 லட்சம்) மானியம் வழங்கப்படுகிறது.

மேற்கண்ட திட்டத்தின் மூலம் பயன்பெற விருப்பமுள்ளவர்கள் திருநெல்வேலி சரக கைத்தறி துறை உதவி இயக்குநர் அலுவலகம், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம், கொக்கிரக்குளம், திருநெல்வேலி – 627009 என்ற முகரியினை அணுகி தொடர்புக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory