» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வைகோ தலைமையில் சமத்துவ நடைபயணம்: ஜன.2ல் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்!
சனி 6, டிசம்பர் 2025 10:16:36 AM (IST)
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நடைபெறும் சமத்துவ நடைபயணத்தை வருகிற ஜன.2ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மதிமுக சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு, சாதி மோதல் தடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்னுடைய தலைமையிலான சமத்துவ நடைபயணம், 2026 ஜன.2-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை 11 நாட்களுக்கு நடைபெறுகிறது.அதன்படி 190 கி.மீ. வரை நடைபெறும் நடைபயணத்தை, திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, இந்துக்கள் வழிபடும் கோயில், கிறிஸ்தவர்கள் வழிபடும் தேவாலயம், இஸ்லாமியர்கள் வழிபடும் மசூதி, சீக்கியர்கள் வழிபடும் குருத்வாராக்கள் அடங்கிய சின்னங்கள் பொருந்திய சிவப்பு, மஞ்சள் நிற கொடியை எனக்கு வழங்கவுள்ளார்.
இந்நிகழ்வில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். சமத்துவ நடைபயணத்துக்காக மதிமுக தொண்டரணி, இளைஞரணி, மாணவரணியில் இருந்து ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
திருச்சி peoplesDec 6, 2025 - 02:31:06 PM | Posted IP 162.1*****
அப்படியே நடந்து போய் த வெ க கட்சியில் சேருவார். அதோடு விஜய் கட்சி காணாமல் போயிடுவார். விஜய் திரும்பவும் நடிக்க போயிடுவார். வைகோ திரும்ப விடியல் கூட சேர்ந்து 2 சீட் வாங்குவார். இதுதான் நடக்க போகிறது.
மேலும் தொடரும் செய்திகள்

சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசரக் கடிதம்!
செவ்வாய் 10, மார்ச் 2026 4:26:06 PM (IST)

கோவில் சொத்துக்களும் உருக்கிய தங்கமும் எங்கே? - சேகர்பாபுவுக்கு அண்ணாமலை சரமாரி கேள்விகள்!
செவ்வாய் 10, மார்ச் 2026 4:02:52 PM (IST)

தென்னிந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடு: மத்திய அரசு தலையிட கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
செவ்வாய் 10, மார்ச் 2026 3:49:14 PM (IST)

எரிபொருள் தட்டுப்பாடு: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க இபிஎஸ் வலியுறுத்தல்!
செவ்வாய் 10, மார்ச் 2026 3:26:34 PM (IST)

காவல்துறையில் குறிப்பிட்ட சமூகத்தின் ஆதிக்கம்? ஷியாம் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!
செவ்வாய் 10, மார்ச் 2026 3:14:37 PM (IST)

கொசுவர்த்தி சுருளால் தீ விபத்து : கணவன், மனைவி, குழந்தை உயிரிழப்பு
செவ்வாய் 10, மார்ச் 2026 12:41:21 PM (IST)


athuDec 8, 2025 - 05:57:59 PM | Posted IP 162.1*****