» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நிதி ஒதுக்கியும் மழைநீர் வடிகால் பணிகள் முடியவில்லை: திமுக அரசை சாடிய விஜய்!
புதன் 3, டிசம்பர் 2025 4:41:21 PM (IST)
மழைநீர் வடிகால் வசதியை ஏற்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்தும், நான்கரை ஆண்டுக்கால ஆட்சியில் பணிகள் முடிக்கப்படவில்லை என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விஜய் தனது எக்ஸ் தளத்தில், "சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வடிகால் வசதிகள் முறையாகவும் முழுமையாகவும் செய்து முடிக்கப்படாததே மக்களின் இந்தத் துயரத்திற்குக் காரணம். பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.மழையால் பாதிப்பிற்கு உள்ளாகும் மக்களுக்குத் தேவையான உதவிகளைப் பாதுகாப்போடு செய்திட வேண்டும் என்று கட்சியினரைக் கேட்டுக்கொள்கிறேன். மழைநீர் வடிகால் வசதியை ஏற்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்தும், நான்கரை ஆண்டுக்கால ஆட்சியில் பணிகள் முடிக்கப்படவில்லை. மக்கள் மீது சிறிதேனும் அக்கறையிருந்திருந்தால் கொஞ்சமாகப் பெய்த மழைக்கே இவ்வளவு தண்ணீர் தேங்கியிருக்காது.
மீதமுள்ள பருவமழைக் காலத்திலாவது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகாத வகையிலும், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையிலும் மழைநீர் வெளியேறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கவின் ஆணவப்படுகொலை வழக்கு: கைதான சப்-இன்ஸ்பெக்டரின் ஜாமீன் மனு தள்ளுபடி!
வியாழன் 4, டிசம்பர் 2025 12:04:01 PM (IST)

டிஎன்பிஎஸ்சி 2026-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை இணையதளத்தில் வெளியீடு
வியாழன் 4, டிசம்பர் 2025 11:56:27 AM (IST)

தூத்துக்குடியில் 7 புதிய மகளிர் விடியல் பயண பேருந்து சேவை : அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்!
வியாழன் 4, டிசம்பர் 2025 11:01:52 AM (IST)

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுப்பு: 12 மணி நேரம் நீடித்த பரபரப்பு
வியாழன் 4, டிசம்பர் 2025 10:43:16 AM (IST)

திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
வியாழன் 4, டிசம்பர் 2025 10:27:42 AM (IST)

தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் திருக்கார்த்திகை விழா: சொக்கப்பனை எரிப்பு!
புதன் 3, டிசம்பர் 2025 8:19:45 PM (IST)


.gif)