» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

டிஎன்பிஎஸ்சி 2026-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை இணையதளத்தில் வெளியீடு

வியாழன் 4, டிசம்பர் 2025 11:56:27 AM (IST)

2026-ம் ஆண்டுக்கான தேர்வுகள் அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு, தேர்வு நடத்தி அதன் மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) செய்து வருகிறது. அதன்படி, குரூப்-1, 2, 2ஏ, 4, 5 என பல்வேறு பதவிகளுக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.

இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆண்டு அட்டவணையை வெளியிட்டு அதன்படி, பணியிடங்களுக்கான அறிவிப்புகளை வெளியிடுவதும், தேர்வுகளை நடத்துவதுமான நடவடிக்கைகளை எடுக்கிறது. அந்த வகையில் 2026-ம் ஆண்டுக்கான அட்டவணையை https://tnpsc.gov.in/english/annual-planner.html என்ற இணையதளத்தில் டி.என்.பி.எஸ்.சி. நேற்று வெளியிட்டு இருக்கிறது.

அதில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் பணிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு அடுத்த ஆண்டு (2026) மே மாதம் 20-ம்தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஆகஸ்டு 3-ம்தேதி தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப்-1 பணியிடங்களுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 23-ம்தேதி வெளியிடப்படும் என்றும், தேர்வு செப்டம்பர் 6-ம்தேதியும் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

குரூப்-2, 2ஏ பணியிடங்களுக்கான அறிவிப்பு ஆகஸ்டு 11-ம்தேதி வெளியிடப்பட்டு, அக்டோபர் 25-ம்தேதி தேர்வு நடத்தப்படும். அதிகம் பேர் விண்ணப்பிக்கக் கூடிய குரூப்-4 பணியிடங்களுக்கான அறிவிப்பு அக்டோபர் 6-ம்தேதி வெளியாகிறது. தேர்வு டிசம்பர் 20-ம்தேதி நடத்தப்பட உள்ளது. இதேபோல், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் பணிகளுக்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அறிவிப்பு வெளியிடும்போது தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory