» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கோவை பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அதிகபட்ச தண்டனை: முதல்வர் ஸ்டாலின் உறுதி
செவ்வாய் 4, நவம்பர் 2025 12:14:42 PM (IST)
கோவையில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை விரைந்து பெற்றுத் தர, காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு வேளையில் கல்லூரி மாணவி ஒருவர், 3 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை தனிப்படை போலீசார் துப்பாக்கியால் காலில் சுட்டுப் பிடித்தனர். பிடிபட்ட 3 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது. இத்தகைய கொடூர குற்றச் செயல்களைக் கண்டிக்க எந்தக் கடுஞ்சொல்லும் போதாது. இதில் ஈடுபட்ட குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை விரைந்து பெற்றுத் தர, காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
மேலும் நம் மகளிர் அனைத்துத் துறைகளிலும் அடையும் முன்னேற்றம்தான் இத்தகைய வக்கிர மிருகங்களின் ஆணாதிக்க மனநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.முழுமையான முற்போக்குச் சமூகமாக நாம் மாறுவதற்கு வழிவகுக்கும்.” எனப் பதிவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொடுமுடியாறு அணையில் நவ.10ம் முதல் தண்ணீர் திறப்பு : தமிழக அரசு ஆணை!
வெள்ளி 7, நவம்பர் 2025 5:53:55 PM (IST)

புதிய வாகனம் தராமல் ஏமாற்றிய எலக்ட்ரிக் பைக் நிறுவனம் நுகர்வோருக்கு ரூ.63,000 வழங்க உத்தரவு!
வெள்ளி 7, நவம்பர் 2025 5:35:49 PM (IST)

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரிப்பு: குஷ்பு குற்றச்சாட்டு!
வெள்ளி 7, நவம்பர் 2025 5:02:56 PM (IST)

துர்கா ஸ்டாலினை அநாகரிகமாக பேசியதாக பாஜக நிர்வாகி மீது திமுக வழக்கறிஞர் அணி புகார்!
வெள்ளி 7, நவம்பர் 2025 4:35:02 PM (IST)

எஸ்.ஐ.ஆர் என்பது ஜனநாயக படுகொலை : தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. பேட்டி
வெள்ளி 7, நவம்பர் 2025 4:15:30 PM (IST)

மூதாட்டிகள் இருவரை கொன்று நகை கொள்ளை : கொலையாளியை சுட்டுப் பிடித்த போலீஸ்!
வெள்ளி 7, நவம்பர் 2025 12:40:16 PM (IST)


.gif)