» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
திங்கள் 27, அக்டோபர் 2025 12:04:26 PM (IST)
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்ட போது ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு தரப்பிலிருந்து ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிடப்பட்டது. அதேபோல், இந்த விவகாரம் பற்றி விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம், ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரவிட்டது.ஆனால் த.வெ.க. தரப்பில் கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட விபத்தில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழுவை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டது.
அது மட்டும் இன்றி உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழுவுக்கு இடைக்கால தடை விதித்தது. இதனை தொடர்ந்து கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்த சி.பி.ஐ. அதிகாரிகள், கரூர் மாவட்ட காவல் துறையிடமிருந்து கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் கோப்புகளை பெற்று கொண்டு விசாரணையை தொடங்கினர். இந்நிலையில் சி.பி.ஐ. அதிகாரிகள் தரப்பில் இருந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
அதனுடைய நகல், தமிழக வெற்றிக்கழக கட்சியின் தரப்பு வழக்கறிஞருக்கு வழங்கப்பட்டது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீதான வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட நிலையில், முன்ஜாமீன் மனுவை வாபஸ் பெறுவதாக அவர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, தலைமை நீதிபதி அமர்வு இதற்கு அனுமதி அளித்து, அவருடைய முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மோந்தா புயல்: தூத்துக்குடி துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!
திங்கள் 27, அக்டோபர் 2025 11:47:26 AM (IST)

கரூர் துயர சம்பவம்: பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து விஜய் ஆறுதல்!
திங்கள் 27, அக்டோபர் 2025 11:24:11 AM (IST)

வங்கக்கடலில் மோந்தா புயல்: நெல்லை, தென்காசிக்கு பலத்த மழை எச்சரிக்கை!
திங்கள் 27, அக்டோபர் 2025 11:19:35 AM (IST)

சங்ககால வரலாற்று குறிப்புகள் குறித்து பகுப்பாய்வு : அரசுக்கு தொல்லியல் ஆர்வலர் கோரிக்கை!
திங்கள் 27, அக்டோபர் 2025 10:39:12 AM (IST)

2026 தேர்தல் திமுகவிற்கு சோதனையாக இருக்கும் : கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ பேச்சு பேச்சு!
திங்கள் 27, அக்டோபர் 2025 10:22:18 AM (IST)

பைசன் படக்குழுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
திங்கள் 27, அக்டோபர் 2025 8:55:18 AM (IST)


.gif)
VIJAY FANSOct 27, 2025 - 03:02:17 PM | Posted IP 162.1*****