» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கரூர் துயர சம்பவம்: பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து விஜய் ஆறுதல்!
திங்கள் 27, அக்டோபர் 2025 11:24:11 AM (IST)
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு நேரில் வரவழைத்து த.வெ.க., தலைவர் விஜய் ஆறுதல் கூறினார்.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு நேரில் வரவழைத்து அவர்களை தனித்தனியாக சந்தித்து தவெக தலைவர் விஜய் ஆறுதல் கூறி வருகிறார். இந்த சந்திப்பின்போது பாதிக்கப்பட்ட குடும்பங்களிடமிருந்து கோரிக்கைகளையும் அவர் கேட்டறிந்தார்.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பா் 27-ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரசார பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா். இதையடுத்து, செப். 30-ஆம் தேதி தவெக தலைவா் விஜய் காணொலி வெளியிட்டு, பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆறுதல் கூறினாா்.
தொடா்ந்து, அக். 3, 4 மற்றும் அக். 6, 7-இல் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தவெக நிா்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், வீடியோ கால் மூலம் விஜய்யை அவா்களுடன் பேச வைத்தனா். அப்போது, விஜய் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, விரைவில் சந்திப்பதாக கூறினாா். ஆனால், விஜய் கரூா் வருவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்ததால் சந்திப்பு கைவிடப்பட்டது.
இந்நிலையில், கடந்த 18-ஆம் தேதி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரின் வங்கிக் கணக்கில் தலா ரூ.20 லட்சம் வீதம் தவெக சாா்பில் வரவு வைக்கப்பட்டது. நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரை சென்னைக்கு நேரில் வரவழைத்து அவா்களுக்கு ஆறுதல் கூற விஜய் முடிவு செய்தாா்.
இதையடுத்து, சென்னையிலிருந்து வந்த தவெக வழக்கறிஞா்கள், நிா்வாகிகள் மற்றும் கரூா் மாவட்ட நிா்வாகிகள் ஆகியோா் நேற்று காலை உயிரிழந்தவா்களின் வீடுகளுக்கு நேராக சென்று அவா்களை வாகனங்களில் வெண்ணைமலை முருகன் கோயிலுக்கு அழைத்து வந்தனா். அங்கு அவா்களுக்கு தேவையான உணவு, குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
இதையடுத்து, சென்னையிலிருந்து வரவழைக்கப்பட்டு, வெண்ணைமலை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 சொகுசு பேருந்துகளில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரை ஒரு பேருந்துக்கு 30-க்கும் மேற்பட்டவா்கள் என 5 பேருந்துகளில் 150-க்கும் மேற்பட்டோரை அழைத்துச் சென்றனா். தொடர்ந்து அவா்கள் சென்னையில் இரவு தங்கவைக்கப்பட்ட நிலையில் இன்று மகாபலிபுரத்தில் உள்ள விடுதியின் அரங்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து விஜய் ஆறுதல் கூறி வருவருவது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
திங்கள் 27, அக்டோபர் 2025 12:04:26 PM (IST)

மோந்தா புயல்: தூத்துக்குடி துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!
திங்கள் 27, அக்டோபர் 2025 11:47:26 AM (IST)

வங்கக்கடலில் மோந்தா புயல்: நெல்லை, தென்காசிக்கு பலத்த மழை எச்சரிக்கை!
திங்கள் 27, அக்டோபர் 2025 11:19:35 AM (IST)

சங்ககால வரலாற்று குறிப்புகள் குறித்து பகுப்பாய்வு : அரசுக்கு தொல்லியல் ஆர்வலர் கோரிக்கை!
திங்கள் 27, அக்டோபர் 2025 10:39:12 AM (IST)

2026 தேர்தல் திமுகவிற்கு சோதனையாக இருக்கும் : கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ பேச்சு பேச்சு!
திங்கள் 27, அக்டோபர் 2025 10:22:18 AM (IST)

பைசன் படக்குழுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
திங்கள் 27, அக்டோபர் 2025 8:55:18 AM (IST)


.gif)