» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பைசன் படக்குழுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

திங்கள் 27, அக்டோபர் 2025 8:55:18 AM (IST)



பைசன்' படத்தை பார்த்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் நடிகர் துருவ் விக்ரமை நேரில் அழைத்து பாராட்டினார். 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த ‘பைசன்' திரைப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்து இருக்கிறது. சாதி ஏற்றத்தாழ்வுகளால் ஒரு கபடி வீரரின் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களே கதையாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே ‘பைசன்' படத்தை பார்த்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் நடிகர் துருவ் விக்ரமை நேரில் அழைத்து பாராட்டினார். துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பாராட்டு தெரிவித்தார்.

இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மாரி செல்வராஜின் ஒவ்வொரு படத்தையும் நான் உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன். ஒவ்வொன்றும் ஒரு ‘ஷார்ப்' ஆன கருத்தையும், தாக்கத்தையும் நம் மனங்களில் பதிக்கத் தவறியதே இல்லை. அவ்வகையில் விளையாட்டுத் துறையை மையமாக வைத்து, இளைஞர்கள் கைக்கொள்ள வேண்டிய பாதையை, அரசியலை மிக முதிர்ச்சியுடன் காட்டியிருக்கிறார் மாரி செல்வராஜ். இதுபோல மேலும் பல படைப்புகளை தமிழ்த் திரையுலகுக்கு வழங்க மாரி செல்வராஜூக்கு எனது வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory