» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் கந்த சஷ்டி விழா 2வது நாள் : வெள்ளி சப்பரத்தில் சுவாமி வீதியுலா

வியாழன் 23, அக்டோபர் 2025 8:26:08 PM (IST)



தூத்துக்குடி சிவன் கோவிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் கந்த சஷ்டி விழா 2வது நாளான இன்று சுவாமி வீதியுலா நடைபெற்றது. 

தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் கந்த சஷ்டி திருவிழா நேற்று தொடங்கியது. தொடா்ந்து சிறப்பு தீபாராதனையும், மாலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றன. 

திருவிழாவின் 2வது நாளான இன்று இரவு சுப்பிரமணிய சுவாமி வெள்ளி சப்பரத்தில் ரத வீதியுலா நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 27-ஆம் தேதி நடைபெறுகுறிது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீசுப்பிரமணியசுவாமி மகமை பரிபலான சங்கத்தின் தலைவர் பிரமநாயகம், செயலாளர் எம்.எஸ்.எஸ். கந்தப்பன், துணைத் தலைவர் ராமலிங்கம், உதவிச் செயலாளர் தியாகராஜன் ஆகியோர் செய்து வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory