» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தாம்பரம்-செங்கல்பட்டு 4-வது புதிய ரயில் பாதை திட்டத்திற்கு ரூ.157 கோடி: பாஜக வரவேற்பு!

வியாழன் 23, அக்டோபர் 2025 5:38:51 PM (IST)

தாம்பரம்-செங்கல்பட்டு இடையிலான நான்காவது ரயில் பாதை திட்டத்துக்கு மத்திய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைத்து புறநகர் ரயில் இணைப்பை வலுப்படுத்தும் வகையில் ரூ.757.18 கோடி மதிப்பீட்டில் தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான 4-வது ரயில் வழித்தடத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இப்புதிய தடத்தால், ஆண்டுக்கு 1.344 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டு, ரூ.157 கோடி கூடுதல் வருவாய் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தொடர்ந்து தமிழகத்தின் இரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்தி வளர்ச்சிக்குத் தொடர்ந்து வித்திடும் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கும் தமிழக மக்கள் சார்பாக எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory