» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மனோரமா மகன் பூபதி மறைவு: இந்திய கம்யூனிஸ்ட் மு.வீரபாண்டியன் இரங்கல்!

வியாழன் 23, அக்டோபர் 2025 5:14:33 PM (IST)



பழம்பெரும் நடிகை மனோரமாவின் மகன் பூபதி இன்று காலை சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் "தமிழ் திரையுலகில் தனி முத்திரை பதித்த ஆச்சி மனோரமாவின் மகனும், நடிகருமான பூபதி (70) இன்று (23.10.2025) காலை சென்னையில் காலமானார் என்ற துயரச் செய்தியறிந்து வேதனையுற்றோம்.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் நிலைத்து, நீடித்த சிறப்புக்குரிய நகைச்சுவைக் கலைஞர் மனோரமா, இவரது ஒரே மகன் பூபதி. சில திரைப்படங்களில் நடித்துள்ளார். காலமான பூபதியின் வாழ்விணையர் தனலட்சுமி, மகன் பி.ராஜராஜன், மகள்கள் அபிராமி, மீனாட்சி ஆகியோர் இருக்கின்றனர்.

அன்னாரின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கலையுலக நண்பர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது. வருத்தத்துடன், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory