» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சார்பதிவாளர் அலுவலகங்களில் நாளை கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு: பதிவுத் துறை தலைவர்
வியாழன் 23, அக்டோபர் 2025 10:14:26 AM (IST)
சார்பதிவாளர் அலுவலகங்களில் நாளை கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்யப்படும் என்று பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
சுபமுகூர்த்த தினங்களில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் புதிய முன்பதிவுகள் அதிகம் நடைபெறும். அந்த வகையில் ஐப்பசி மாத சுபமுகூர்த்த தினங்களில் அதிக அளவில் பத்திரப்பதிவு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து ஐப்பசி மாத முகூர்த்த நாட்கள் என்ற அடிப்படையில் வரும் 24-ந்தேதி(நாளை) மற்றும் 27-ந்தேதி ஆகிய இரு தினங்களில் கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன்படி வழக்கமாக 100 டோக்கன்கள் வழங்கப்படும் அலுவலகங்களில் 150 டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதேபோல் 200 டோக்கன்கள் வழங்கப்படும் அலுவலகங்களில், 300 டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மேலும் அதிக பத்திரப்பதிவு நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு கூடுதலாக சாதாரண மற்றும் தட்கல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதிவுத் துறை ஐ.ஜி., தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தாம்பரம்-செங்கல்பட்டு 4-வது புதிய ரயில் பாதை திட்டத்திற்கு ரூ.157 கோடி: பாஜக வரவேற்பு!
வியாழன் 23, அக்டோபர் 2025 5:38:51 PM (IST)

மனோரமா மகன் பூபதி மறைவு: இந்திய கம்யூனிஸ்ட் மு.வீரபாண்டியன் இரங்கல்!
வியாழன் 23, அக்டோபர் 2025 5:14:33 PM (IST)

தூய்மை பணியாளர்களுக்கு தினசரி 3 வேளை உணவு வழங்கும் திட்டம்: தமிழக அரசு அனுமதி!
வியாழன் 23, அக்டோபர் 2025 4:50:54 PM (IST)

உணர்வுப் பூர்வமான திரைப்படம்: பைசன் படக்குழுவுக்கு அண்ணாமலை பாராட்டு!
வியாழன் 23, அக்டோபர் 2025 4:34:52 PM (IST)

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகன பிரச்சாரம், பேரணி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
வியாழன் 23, அக்டோபர் 2025 4:02:33 PM (IST)

தென்காசி மாவட்டத்திற்கு அக்.29,30 தேதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம்!
வியாழன் 23, அக்டோபர் 2025 3:28:48 PM (IST)
