» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லை முருகன் கோவில்களில் கந்தச‌‌ஷ்டி விழா தொடங்கியது : வருகிற 27-ஆம் தேதி சூரசம்ஹாரம்!

வியாழன் 23, அக்டோபர் 2025 8:35:20 AM (IST)

நெல்லையில் முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா நேற்று தொடங்கியது. வருகிற 27-ஆம் தேதி (திங்கட்கிழமை) சூரசம்ஹாரம் நடக்கிறது.

முருகன் கோவில்களில் நடைபெறும் பிரசித்தி பெற்ற விழாக்களில் கந்தசஷ்டியும் ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நெல்லை சந்திப்பு பாளையஞ்சாலைகுமார சுவாமி கோவிலில் காலையில் யாகசாலை பூஜை, சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. விழா நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெறுகிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 27-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு நடக்கிறது. 28-ஆம் தேதி இரவு திருக்கல்யாணம் வைபவமும் நடைபெறும். நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. வருகிற 27-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு சூரசம்ஹாரமும், 28-ஆம் தேதி இரவு 7 மணிக்கு திருக்கல்யாணமும் நடக்கிறது.

பாளையங்கோட்டை மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று காலையில் யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோன்று குறிச்சி சொக்கநாதர் கோவிலில் உள்ள சுப்பிரமணியருக்கு கந்தசஷ்டி விழா நேற்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 27-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு சூரசம்ஹாரம், 6.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 7 மணிக்கு சப்பரத்தில் சுவாமி வீதி உலா நடக்கிறது. 28-ஆம் தேதி இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.

இதேபோல நெல்லையப்பர் கோவில், பாளையங்கோட்டை சிவன் கோவில், குட்டத்துறை முருகன் கோவில், வாசுகிரி மலை முருகன் கோவில், பொன்மலை முருகன் கோவில், நெல்லை டவுன் வேணுவன குமாரர் கோவில் உள்பட பல்வேறு முருகன் கோவில்களிலும் நேற்று கந்தசஷ்டி விழா தொடங்கியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory