» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் தற்காலிக சீரமைப்பு பணி: போக்குவரத்து சீரானது!

வியாழன் 23, அக்டோபர் 2025 8:32:46 AM (IST)



ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் சேதமடைந்த பகுதிகளில் தற்காலிக சீரமைப்பு பணி நடைபெற்றது. இதையடுத்து போக்குவரத்து சீரானது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மழைவெள்ளத்தில் ஏரல் தாமிரபரணி ஆறு உயர்மட்ட பாலம் சேதமடைந்தது. அந்த பாலத்தின் வடபகுதி இணைப்பு சாலையில் அரிப்பு ஏற்பட்டு வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டது. இதனால் அந்த பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதையடுத்து பழுதடைந்து கிடந்த பழைய தாம்போதி பாலம் உடனடியாக சீரமைக்கப்பட்டு போக்குவரத்து நடந்தது.

இதற்கிடையில் உயர்மட்ட பாலத்தில் சேதமடைந்த பகுதியில் ரூ.6 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் நடந்தது. இந்த பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு புதிய உயர்மட்ட பாலத்தில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் தீபாவளி தினத்தன்று திடீரென பாலத்தின் இணைப்பு சாலை அரை அடி இறங்கியது. 

மேலும் பாலத்தின் மையப்பகுதியில் 2 இடத்தில் பெரிய பள்ளம் உருவானது. இதனால் சேதமடைந்த அந்த பாலத்தில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிவந்தனர். பெரும்பாலான வாகன ஓட்டிகள் அந்த பாலத்தை தவிர்த்து பழைய தரைமட்ட பாலத்தை பயன்படுத்தி வந்தனர். அந்த பாலத்தில் போக்குவரத்து தடைபட்டது.

இதைதொடர்ந்து நேற்று காலையில் நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் முருகேசன், கோட்ட பொறியாளர் ஜெயபிரகாஷ், உதவி கோட்ட பொறியாளர் சின்னச்சாமி மற்றும் அதிகாரிகள் சேதமடைந்த ஏரல் தாமிரபரணி ஆற்று பாலத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு பாலத்தில் ஏற்பட்டசேதத்தை பார்வையிட்ட அதிகாரிகள், உடனடியாக தற்காலிகமாக சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். 

பொக்லைன் எந்திரம் மூலம் இணைப்பு சாலையில் சேதமடைந்த பகுதியில் தாரை அகற்றிவிட்டு, அதில் ஜல்லி கற்கள், மணலால் நிரப்பி, தார் உற்றி ரோடு ரோலர் தற்காலிக சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோன்று, பாலத்தில் மையப்பகுதியில் ஏற்பட்டு இருந்த பள்ளமும் சீரமைக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று மாலை முதல் அந்த பாலத்தில் போக்குவரத்து சீரானது. அதேசமயம், போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த பாலத்தில் மீண்டும் சேதம் ஏற்படாத வகையில் நிரந்தர சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory