» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பனை மரத்தை வெட்ட மாவட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம் : அரசாணை வெளியீடு
வியாழன் 18, செப்டம்பர் 2025 11:16:50 AM (IST)
பனை மரத்தை வெட்ட மாவட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பனை மரங்களை பாதுகாப்பது என்பது சுற்றுச்சூழல் சமநிலைக்கும் பொருளாதாரத்திற்கும் பாரம்பரியத்திற்கும் முக்கியமானது. பனைமரங்கள் வறட்சியை தாங்கி வலுவாக நிற்பதுடன், பனை வெள்ளம், பாய் உள்ளிட்ட பல பொருட்களை தந்து, விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் அளித்து வருகிறது. புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களின் போது நிலச்சரிவை தடுப்பதில் பனை மரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்தநிலையில், பனை மரத்தை வெட்ட மாவட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், பனை மரத்தை வெட்டி விற்கவும், செங்கல் சூளைக்கு பயன்படுத்துவதை தடுக்கும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பனை மரம் வெட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம்
தவிர்க்க இயலாத சூழலில் பனை மரங்களை வெட்ட நேரிட்டால் ஆட்சியர் அனுமதி பெறுவது கட்டாயம். பனை மரங்களை வெட்ட 'உழவர் செயலி'யில் விண்ணப்பிக்க வேண்டும். வெட்டப்பட்ட பனை மரங்களை வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லும்போது, அனுமதி கடிதம் காட்டாயம்.நீர்நிலைகளின் காவலன் என்று அழைக்கப்படும் பனை மரங்களை பாதுகாக்கும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனைமரங்களை பாதுகாக்கும் நோக்கில், சட்டசபையில் 110 விதியின் கீழ் பனை மரத்தை வெட்டக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பனை மரம் வெட்ட வேண்டும் என்றால் ஆட்சியர் அனுமதி பெற்று தான் வெட்ட வேண்டும். மேலும் பனை மரத்தை வெட்டினால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஓபிஎஸ் உட்பட 3பேரை கூட்டணியில் கூட சேர்க்க முடியாது: அமித் ஷாவிடம் இபிஎஸ் திட்டவட்டம்
வியாழன் 18, செப்டம்பர் 2025 12:32:30 PM (IST)

வாலிபர் மீது கார் ஏற்றிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 11:39:54 AM (IST)

திமுக முப்பெரும் விழாவில் கனிமொழிக்கு பெரியார் விருது: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 10:27:27 AM (IST)

தாயை வெட்டிக்கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை: நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
வியாழன் 18, செப்டம்பர் 2025 8:29:56 AM (IST)

கன்டெய்னர் லாரி மீது அரசு பஸ் மோதல்; டிரைவர் படுகாயம்: போக்குவரத்து பாதிப்பு!
வியாழன் 18, செப்டம்பர் 2025 8:16:59 AM (IST)

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி : 21 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு!
புதன் 17, செப்டம்பர் 2025 4:51:32 PM (IST)
