» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நடிகை விஜயலட்சுமியிடம் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு

வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:04:07 PM (IST)

நடிகை விஜயலட்சுமியிடம் சீமான் வரும் 24-ம் தேதிக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அவரை கைது செய்வதற்கான தடை ரத்து செய்யப்படும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி குற்றம்சாட்டினார். இது தொடர்பாக விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை தொடர்ந்த பாலியல் புகார் வழக்கை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சீமான் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகை விஜயலட்சுமியிடம் சீமான் வரும் 24-ம் தேதிக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கோர தவறினால், சீமானை கைது செய்வதற்கான தடை ரத்து செய்யப்படும். வழக்கை எதிர்கொள்ள சீமான் தயாராக இருக்க வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது. 

மேலும், விஜயலட்சுமி சுமூகமாக செல்வதற்கான உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இருவரும் குற்றச்சாட்டுகளை திரும்ப பெற்று, மன்னிப்பு கேட்கட்டும். நடிகையை தொந்தரவு செய்யமாட்டேன் என சீமான் உறுதியளிக்க வேண்டும். சீமானுக்கு எதிரான புலன் விசாரணைக்கு இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பின்னர், இந்த வழக்கை வரும் 24-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம்  ஒத்தி வைத்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory