» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மருமகன் சபரீசனின் தந்தை வேதமூர்த்தி மறைவு : முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

வெள்ளி 12, செப்டம்பர் 2025 3:46:09 PM (IST)



உடல் நலக்குறைவால் காலமான தனது சம்பந்தி வேதமூர்த்தியின் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். 

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள அரியநாயகபுரத்தை சேர்ந்தவர் வேதமூர்த்தி. இவர் வங்கி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். வேதமூர்த்தி (வயது 82) உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஓஎம்ஆரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை மருத்துவமனையில் அவர் காலமானார்.

சென்னை கொட்டிவாக்கம் ஏஜிஎஸ் காலனியில் உள்ள இல்லத்தில் வேதமூர்த்தி உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது சம்பந்தியும், சபரீசன் தந்தையுமான வேதமூர்த்தி உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

முன்னதாக அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், எனது மருமகன் சபரீசன் தந்தையார் வேதமூர்த்தி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். வேதமூர்த்தி அவர்களின் மறைவு ஒட்டுமொத்தக் குடும்பத்திற்குமே ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். தந்தையை இழந்து வாடும் சபரீசன் அவர்களுக்கும், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory