» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அஜித்குமாரை போல 24 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி அளிக்காதது ஏன்? விஜய் கேள்வி

ஞாயிறு 13, ஜூலை 2025 6:38:22 PM (IST)



அஜித்குமாரை போல காவல் மரணமடைந்த 24 பேரின் குடும்பங்களுக்கு திமுக அரசு நிவாரண நிதி அளிக்காதது ஏன்? என்று விஜய் கேள்வி எழுப்பினார்.

சிவகங்கை மாவட்டம் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த சம்பவத்துக்கு நீதி கேட்டு த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் சென்னை சிவானந்தா சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

அக்கட்சியில் தலைவர் விஜய் கருப்பு நிற உடை அணிந்து, பதாகையை ஏந்தி போராட்டத்தில் பங்கேற்றார். நீதி வேண்டும், நீதி வேண்டும், அஜித்குமார் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று த.வெ.க.வினர் முழக்கமிட்டனர்.

இந்நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: தி.மு.க. ஆட்சியில் காவல்துறையால் 24 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேரின் குடும்பத்தினருடன் முதலமைச்சர் மன்னிப்பு கேட்பாரா?  திருப்புவனம் அஜித்தை தவிர லாக்அப் மரணமடைந்த 24 பேரின் குடும்பத்தினரிடம் முதலமைச்சர் sorry சொல்லாதது ஏன்?

அஜித்குமாரை போல காவல் மரணமடைந்த 24 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி அளிக்காதது ஏன்? தி.மு.க. அரசு இப்போது sorry-மா மாடல் அரசாக மாறிவிட்டது இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory